Header Ads



ஜேர்மனியில் சிறுவர்களை பாலியல் கொடுமைசெய்த 60 கிறிஸ்தவ பாதிரியார்கள் மீது வழக்கு


(TU) சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2000-ஆம் ஆண்டிற்கும் 2010-ஆம் ஆண்டிற்கும் இடையே 60 கிறிஸ்தவ பாதிரியார்கள் மீது வழக்குப் பதிவுச்செய்துள்ளதாக ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் கத்தோலிக்க சர்ச் தெரிவித்துள்ளது. சர்ச் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

10 வருடங்களில் 576 வழக்குகள் பதிவாகியுள்ளன. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் சிறுவர்கள் ஆவர் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது. ஜெர்மன் பிஷப் கான்ஃப்ரன்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை இவ்வறிக்கையை
 வெளியிட்டது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள பாதிரியார்கள் மனோரீதியாக ஆரோக்கியமாகவே உள்ளனர். இவர்களுக்கு எவ்வித மன நல பிரச்சனைகளும் இருப்பதாக கண்டறிய முடியவில்லை என்று அறிக்கை கூறுகிறது.

பாதிரியார்கள் சர்ச்சில் தங்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவதாக பலரும் குற்றம் சாட்டியதை தொடர்ந்து கடந்த 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இது தொடர்பாக ஆய்வை நடத்த சர்ச் தீர்மானித்திருந்தது.

No comments

Powered by Blogger.