ரணில் உலக சாதனை படைக்கிறார் - ஐ,தே.க.க்கு இன்னும் 6 வருடங்களுக்கு அவரே தலைவர்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இன்னும் 6 வருடங்களுக்கு ரணில் விக்ரமசிங்க நீடிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீகொத்தாவில் இன்று 1-12-2012 காலை ஆரம்பமான கட்சியின் 54 ஆவது மாநாட்டில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க இன்னும் 6 வருடங்களுக்கு இருப்பதற்கான யோசனை கட்சியின் மாநாட்டில் பெரும்பான்யைமான வாக்குகளுடன் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டது.
கட்சி தலைமையின் பதவிகாலத்தை மேலும் 6 வருடங்களுக்கு நீடிப்பதற்கான யோசனையை ஜனாதிபதி சட்டத்தரணியும் எம்.பியுமான விஜேதாஸ ராஜபக்ஷ முன்மொழிந்தார். அதனை அஜித் பி.பெரேரா எம்.பி வழிமொழிந்தார்.
54 ஆவது மாநாட்டிற்கு 6143 பேருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பிவைக்கப்பட்டன. அதில் 5315 பேர் மாநாட்டிற்கு வருகைதந்திருந்தனர். அவர்களில் தலைமைப்பதவியை ஆறு வருடங்களுக்கு நீடிப்பதற்கான யோசனைக்கு 4978 பேர் ஆதரவாகவும் 337 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமைப் பதவியை மேலும் ஆறு வருடங்களுக்கு நீடிப்பதற்கான யோசனைக்கு அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்றக உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, தலதா அத்துகோரளை மற்றும் புத்திக பத்திரண ஆகியோரே எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலதிக பாதுகாப்புக்கென பொலிஸார், ஆயுதம் தரித்த பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனத்துடன் குண்டாந்தடி ஏந்தியிருந்த படையினர், கறுப்பு உடையணிந்த விசேட கலகம் அடக்கும் படையினர் உட்பட 3000 க்கும் மேற்பட்ட படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Post a Comment