இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் 5 நாள் வதிவிட பயிற்சிப் பட்டறை பூர்த்தி (படங்கள்)
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
இலங்கையில் முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் கல்வி மற்றும் ஒழுக்க விடயங்களில் ஒரு புதிய பரிணாமத்தை கொண்டுவரும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் (ஜம்மியதுல் தலபாவின் ) ஏற்பாட்டில் இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்காண ஐந்து நாள் வதிவிட பயிற்சிப் பட்டறையின் இறுதி நாள் நிகழ்வின் பிரதான நிகழ்வான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 28 -12-2012 வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிழ்ரியா வித்தியாலய கேட்போர் கூடத்தில் ஐந்து நாள் நிகழ்வின் பொறுப்பாளர் ஐ.எம்.இப்திகார் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்' காத்தான்குடி ஹிழ்ரியா வித்தியாலய அதிபர் அப்துல் அஸீஸ் மற்றும் கௌரவ அதிதி ஜம்மியாவின் காத்தான்குடி கிளை ஆலோசகர் ஆசிரியர் அப்துர் றஹ்மான் 'காத்தான்குடி ஹிழ்ரியா பள்ளிவாயல் செயலாளர் அஸ்ரப் ஆசிரியர் மற்றும் அதிதிகளினால் 5 நாள் வதிவிட பயிற்சிப்பட்றையை பூர்த்தி செய்த மாணவர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு குறித்த பயிற்சிப்பட்டறையில் முதலாம்'இரண்டாம்'மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்கள் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் காத்தான்குடி கிளையின் தலைவர் இஸட்.எம்.சஜி மற்றும் காத்தான்குடி நகர சபை தவிசாளர் காத்தான்குடி ஹிழ்ரியா வித்தியாலய அதிபர் ஆகியோரினால் தங்கம் வெள்ளி வெண்கள பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவ் ஐந்து நாள் பயிற்சிப் பட்டறை நிகழ்வானது நாடளாவியரீதியில் 22 இடங்களில் 1000 மாணவர்களுக்கு நடைபெற்று வருவதுடன் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக காத்தான்குடி 'மருதமுனை ஆகிய பிரதேசங்களில் நடைபெற்று நிறைவு பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி'ஏறாவூர்'ஒட்டமாவடி'வாழைச்சேனை அக்கரைப்பற்றுஅட்டாளைச்சேனை'சம்மாந்துறை'நிந்தவூர் மருதமுனை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 46 மாணவர்கள் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தினால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
Post a Comment