இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் மாணவர்களுக்காண 5 நாள் வதிவிட நிகழ்வு (படங்கள்)
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்;கத்தின் ஏற்பாட்டில் இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்காண 5ஐந்து நாள் வதிவிட நிகழ்ச்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காத்தான்குடி ஹிழ்ரியா வித்தியாலய கேட்போர் கூடத்தில் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் காத்தான்குடி கிளையின் தலைவர் இஸட்.எம்.சஜி தலைமையில் இடம்பெற்றது.
இவ் ஐந்து நாள் நிகழ்வானது நாடளாவியரீதியில் 22 இடங்களில் 1000 மாணவர்களுக்கு நடைபெறுகின்றது இந்நிகழ்ச்சி கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக காத்தான்குடி'அக்கரைப்பற்று'மருதமுனை ஆகிய மூன்று பிரதேசங்களில் மாத்திரம் நடைபெறுகின்றது.
ஐந்து நாள் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் மனித வாழ்வு'இஸ்லாம் ஓர் அறிமுகம்'இஸ்லாமிய பார்வையில் அறிவை தேடுதல் ( கல்வி வழிகாட்டல்)'மாணவர்களின் தனிப்பட்ட குழு ரீதியான ஆற்றல்களை வெளிக்கொணரும் கலை நிகழ்ச்சி 'சகோதரத்துவம்'ஜம்மிஆ அறிமுகம் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு இடம்பெறுவுள்ளன.
இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்' காத்தான்குடி ஹிழ்ரியா வித்தியாலய உப அதிபர் மௌலவி மன்சூர் (பலாஹி)'ஜம்மியாவின் காத்தான்குடி கிளை ஆலோசகர்களான ஆசிரியர் பாயிஸ் இஸ்லாஹி'ஆசிரியர் அப்துர் றஹ்மான்'இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் உப தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ்'இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் காத்தான்குடி பிராந்திய அமைப்பாளர் நபீல் ஹாபிஸ்'ஊடகவியலாளர் எம்.ஏ.ஸி.எம்.ஜெலீஸ் 'காத்தான்குடி ஹிழ்ரியா பள்ளிவாயல் செயலாளர் அஸ்ரப் ஆசிரியர் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி 'ஏறாவூர் ஒட்டமாவடி' வாழச்சேனை 'அக்கரைப்பற்று'அட்டாளைச்சேனை'சம்மாந்துறை'நிந்தவூர்' மருதமுனை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 46 மாணர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
Post a Comment