ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்க ஏற்பாட்டில் 5 நாள் வதிவிட செயலமர்வு
ஜம்இய்யதுத் தலபா ஒவ்வொரு வருடமும் க.பொ.த சா/த பரீட்சையை எதிர்கொண்ட மாணவர்களுக்கு அவர்களது பரீட்சையைத் தொடர்ந்து வாழ்வின் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்களை வழங்கும் நோக்கில் 5 நாள் வதிவிட செயலமர்வுகளை நடாத்தி வருகிறது.
இச்செயலமர்வானது எமது வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்பதனை இதில் கலந்துகொண்ட அனைவரும் ஏகோபித்துக் கூறும் வார்த்தையாகும். இதனால் ஜம்இய்யா வரலாற்றில் 5 நாள் செயலமர்வு தனக்கென அலாதியான இடத்தை பிடித்துள்ளது.
அந்த வகையில் இம்முறையும் இப்பயிற்சிநெறியினை சிறந்த முறையில் நடாத்துவதற்கு ஜம்இய்யா தீர்மானித்துள்ளது. முழு நாட்டிலும் 1000 மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுகின்றது. அந்த 1000 பேரில் நீங்களும் இணைந்து கொள்ள விரும்புகிறீர்களா ?
டிசம்பர் 22ம் திகதி முதல் டிசம்பர் 26ம் திகதி வரை முழு நாட்டிலும் 20 இடங்களில் நடைபெறும். விண்ணப்ப முடிவுத் திகதி: 17.12.2012
ஒரு பயிற்சி நெறிக்கு 50 பேர் மட்டுமே இணைத்துக் கொள்ளப்படுவர். திறமை அடிப்படையில் அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்படும்.
ஒரு பயிற்சிநெறிக்கு 50 மாணவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் என்பதனைக் கருத்திற்கொண்டு இறுதிநேரம் வரை தாமதித்து சிரமங்களை எதிர்கொள்ளாதிருக்க உடன் எங்கள் மாகாண பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு உங்களது பெயர்களை இப்போதே பதிவு செய்துகொள்ளுங்கள்.
தொடர்புளுக்கு :
வடமத்திய மாகாணம் சகோ தௌபீக் 077-4976309
திருகோணமலை சகோ. லுக்மான் 077-7543573, 075-6246180
மட்டக்களப்பு சகோ. சஜீ 077-3664464
அம்பாறை சகோ. ரிஸாட் 075-6188281
ஊவா மாகாணம் : சகோ. பாஹிம் 071-4733730
தென் மாகாணம் : சகோ. ஹம்ஸர் 077-7966643, 071-4056600
கொழும்பு : சகோ. ஷகூர் 071-7157623
களுத்துறை : சகோ. ரிம்ஸான் 077-2618973
கம்பஹா சகோ. அப்ராஸ் 077-4565789
வடமேல் மாகாணம் சகோ. நப்லான் 071-7183010
சபரகமுவ, மத்திய மாகாணங்கள் : சகோ. நஸ்ரின் 077-4647626
அஷ்ஷெய்க். தமீம் (நளீமி)
பயிற்சி ஒருங்கிணைப்பாளர்
ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்.
Post a Comment