சகோதரி றிசானாவை சவூதி அரேபியாவுக்கு அனுப்பியவருக்கு 4 வருட சிறை
(sfm) சவுதி அரேபியாவில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட மூதூர் பணிப்பெண் ரிஷானா நபீக்கிற்கு வெளிநாடு செல்வதற்கு உதவி அளித்த முகவருக்கு நான்கு வருட சிறைத் தண்டனை இன்று வழங்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று 24-12-2012 கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த முகவருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், நான்கு வருட சிறைத் தண்டனையை, ஐந்து வருடத்திற்கு ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தண்டனை வழங்கப்பட்ட முகவர் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment