அம்பாறையில் சுழல் காற்று - விவசாயி மரணம் - 4 விவசாயிகள் உயிர் தப்பினர்
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் வட்டமடு பிரதேசத்தில் வீசிய சுழற்காற்றின் காரணமாக மரம் முறிந்து வீழ்ந்ததில் வயலில் காவல் புரிந்து வந்த விவசாயி நேற்று (17) திங்கட்கிழமை மாலை பரிதாபகரமான முறையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்துள்ளார்.
கண்ணகிபுரம் 2ம் பிரிவைச்சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான விவசாயி சுப்பையா மகேஸ்வரன் வட்டமடு பிதேசத்திலுள்ள தமது விவசாயப் பயிர்ச்செய்கையை காட்டு விலங்குகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் அங்கு குடிசையொன்றை அமைத்து அதில் காவல் புரிந்து வந்துள்ளார்.
சம்பவதினம் மாiலை கடும் காற்றுடன் பெய்த அடை மழையின் காரணமாக அருகிலிருந்த மரம் முறிந்து வீழ்ந்ததில் இவ்விவசாயி கடும் காயங்களுக்குள்ளாகி அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்துள்ளார். மழை காரணமாக தஞ்சமடைந்து அவருடன் இருந்த மேலும் நான்கு விவசாயிகள் தெய்வீகத்தனமாக உயிர் தப்பியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment