Header Ads



பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் 4 மாடிக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு


(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)  

கொழும்பு-12 பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் நான்கு மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்லூரி அதிபர் திருமதி என்.எம்.யூசுப்  தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கலந்து கொண்டு நான்கு மாடிக்கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். 

சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி,பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா, கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில், நான்கு மாடிக்கட்டிடத்திற்கான 45 மில்லியன் ரூபா நிதியை வழங்கிய பிரபல கொடை வள்ளல் அல்ஹாஜ் இஸட் ஏ.எம்.றிபாய்  கல்லூரி அதிபர் திருமதி என்.எம்.யூசுப் மேல்மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌசி, மற்றும் மேல்மாகாண சபை உறுப்பினர்கள், தூதுவர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

இதன்போது அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. 
















No comments

Powered by Blogger.