மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் 44 இடங்களில் மனித எழும்புகளின் பாகங்கள் மீட்பு
மாத்தளை வைத்திய சாலை பகுதியில் மொத்தம் 44 இடங்களில் மனித எழும்புகளின் பாகங்கள் மீட்கப் பட்டதாக வைத்திய அதிகாரி அஜித் ஜயசேன தெரிவித்தார்.
மாத்தளை நீதவான் சத்துரிகா டி சில்வா முன் ஆஜராகி அவர் இது பற்றி வாக்கு மூலமளித்தார். அனைத்து பாகங்களும் தனது முன்னிலையிலே வெளியே எடுக்கப்பட்டதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.
இவை தொடர்பான பகுப்பாய்வு அறிக்கைகளின் பின்பு மேலதிக விபரங்களை அறிய முடியுமெனத் தெரிவித்தார்.
இதுதவிர இவ் எழும்புக் கூடுகள் எக்காலத்திற்கு உரியவை என இன்னும் உரிதி செய்யப்படவில்லை. ஆனால் ஒரு சிலரின் அபிப் பிராயப்படி 1944ம் ஆண்டளவில் ஏற்பட் ஒரு மண் சரிவில் அகப்பட்டவர்களாக இருக்கலாம் என யூகங்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment