Header Ads



இலங்கையில் 40 வயதிற்கு மேற்ட்ட சகலருக்கும் கொலஸ்ட்ரோல் பாதிப்பு - டாக்டர் அசேல


(ஜே.எம்.ஹபீஸ்)

சமூகத்தில் சுகதேகிகள் போல் காட்சியளிக்கும் பலரிடம் பாரதூரமான வியாதிகள் காணப்படுவதை உடலியல் தகுதிகாண் பரீட்சைமூலம் அறிந்துள்ளோம். உடல் நலத்திற்கு மருந்தை விட பொறுத்தமான உடற் பயிற்சியே சிறந்தது. அந்த அடிப்படையில் மத்திய மாகாண விளையபட்டு அமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்துநடத்து கின்ற உடற்தகுதி காண் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை நான் மனமாற வரவேற்கிறேன் என்று பேராதனைப் பல்கலைக்கழக விளையாட்டுக் கல்வி மற்றும் உடற்கூற்று விரிவுரையாளரான டாக்டர் அசேல ரத்நாயக்கா தெரிவித்தார்.

(18.12.2012) இன்று கண்டி வை.எம்.பீ.ஏ. மண்டபத்தில் இடம் பெற்ற உடற்தகுதிகாண் பரிசோதனைகளை மேற்கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கும் மற்றும் உடற்தகுதிகாண் தராதரச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இவ்வாறான உடற்தகுதி சான்றிதழ் வழங்கும் நடைமுறை உள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை மத்தியமாகாணத்தில் மட்டுமே இம்முறை கடந்த மூன்று வருடங்களாக இடம் பெற்று வருகிறது.

இது சான்றிதல் மற்றும் பெறும் ஒரு நிகழ்வு அல்ல. இதன் மூலம் தமது உடலிலுள்ள குறைபாடுகளையும் அதற்கான தீர்வையும் கண்டறிய முடிகிறது.

இலங்கையைப் பொறுத்தவரை நாம் ஆய்விற்காக எடுத்துக்கொண்ட ஆண்களில் 40 வயதிற்கு மேற்பட்ட சகலரிலும் கொலஸ்ட்ரோல் பாதிப்பு இருப்பதைக்காண்டறிந்தோம். இதற்கு முதலாவது செய்ய வேண்டியது பொறுத்தமான உடற் பயிற்சியாகும் என்று அவர் தெரிவித்தார்.




No comments

Powered by Blogger.