பஷர் அல் ஆசாத்தின் மனிதவேட்டை தொடருகிறது - ஒரேநாளில் 400 பேர் மரணம்
சிரியாவில் அதிபர் பஷர் அல்- ஆசாத்துக்கு எதிராக கடந்த 21 மாதங்களாக போராடும் பொதுமக்களை ராணுவம் கொன்று குவிக்கிறது. அதில், இதுவரை 45 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இருந்தும் கலவரம் ஓயவில்லை.
போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக புரட்சிப் படை களம் இறங்கியுள்ளது. ராணுவத்துடன் போரிட்டு பல பகுதிகளை தன்வசம் வைத்துள்ளது. அவற்றை மீட்க புரட்சி படையுடன் ராணுவம் கடுமையாக சண்டையிட்டு வருகிறது. ஹோம்ஸ் நகரம் அருகேயுள்ள தெர்பால் பெக் என்ற மாவட்டம் புரட்சிப்படை வசம் உள்ளது.
அதை மீட்க பல நாட்களாக ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. அதில் வெற்றி பெற்று ராணுவம் தற்போது அந்த மாவட்டத்தை தன் வசமாக்கியுள்ளது. இதற்காக நடந்த தாக்குதலில் அங்கு மட்டும் 200 பேர் பலியாகியுள்ளனர். அவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள்.
இதற்கிடையே சிரியா முழுவதும் கலவரம் வலுத்துள்ளது. இதைத் தொடர்ந்து ராணுவம் நடத்திய தாக்குதலில் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் சிரியாவில் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுவரை நடந்த தாக்குதலில் இதில்தான் எப்போதும் இல்லாத அளவுக்கு ஏராமானோர் பலியாகி உள்ளனர். இதைத்தொடர்ந்து சிரியாவுக்கு ஐ.நா.சபை சிறப்பு தூதர் லக்தர் பிராமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த எகிப்து சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு அதிபர் முகமது முர்சியுடன் ஆலோசனை நடத்துகிறார்.
கலவரம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து சிரியாவில் இருந்து ஏராளமானவர்கள் ஜேர்டான் மற்றும் லெபனானுக்கு அகதிகளாக செல்வது அதிகரித்துள்ளது. அங்கு இதுவரை சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக தங்கியுள்ளனர்.
இஸ்வேலை பாதுக்க அமேரிக்கா சிரியாவை பளிவாங்க திட்டமிட்டு அதனை சவுதி அரசின் உதவியுடன் நேரடியாக அமேரிக்கா இஸ்ரேல் போன்ற நாடுகளின் உதவியை பெற்று போராடுகிறது ஒரு கும்பல் அதனை ஆதரித்து செய்தியை பிரசுரிக்கும் ஜப்னா முஸ்லீமுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அத்துடன் பஹ்றைன் நாட்டில் முஸ்லீம்களை அநியாயமாக கொலை செய்யும் அமேரிக்கா மற்றும் சவுதி அரசின் அட்டகாசங்களை மறைக்கிரீர்கள் !!!,, ஏன் அமேரிக்கா எது செய்தாலும் அதனை ஆதரப்பீர்களோ?... அல்லது அமேரிக்காவால் சொல்லப்படும் எக்கருத்தையும் உண்மை என ஆதரிப்பீர்களோ?
ReplyDelete