Header Ads



கொழும்பில் முஸ்லிம்களின் சனத்தொகை 40 வீதமாக அதிகரிப்பு - சிங்களவர் மூன்றாமிடம்

கொழும்பு நகரில் சிங்களவர்களின் சனத்தொகை 24 வீதமாக குறைந்து போயுள்ளதாக, 2012ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்ட புள்ளிவிபரங்கள் கூறுவதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

1971ம் ஆண்டு கொழும்பு நகரில், 50 வீதமாக இருந்த சிங்களவர்களின் சனத்தொகை, 2012இல் 24 வீதமாக குறைந்துள்ளது. 

அதேவேளை, தமிழர்களின் சனத்தொகை 33 வீதமாகவும், முஸ்லிம்களின் சனத்தொகை 40 வீதமாகவும் அதிகரித்துள்ளது. 

1971ம் ஆண்டில் கொழும்பு நகரில் முஸ்லிம்களின் சனத்தொகை 19 வீதமாகவும், தமிழர்களின் சனத்தொகை 24.5 வீதமாகவும் இருந்துள்ளது. 

தற்போது, கொழும்பு நகரில், 79,468 சிங்களவர்களும், 106,325 தமிழர்களும், 126,345 முஸ்லிம்களும் வசிப்பதாகவும் பிந்திய புள்ளிவிபரங்கள் தெரிவிப்பதாக கொழும்பு நாளிதழ் தெரிவித்துள்ளது.

5 comments:

  1. ஒல்லாந்தர் இலங்கைக்கு வந்த போது கோட்டையில் பல முஸ்லிம் ராஜஸ்தானிகள் இருந்ததாகவும், சில முஸ்லிம் குட்டி மன்னர்கள் இருந்ததாகவும் 9ம் ஆண்டு வரலாற்று புத்தகத்தில் உள்ளது. இதன் மூலம் ஒரு காலத்தில் கொழும்பில் 90 வீதமானோர் முஸ்லிம்களாகவே இருந்தனர். பின்னர் இவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டு வெளியெற்றப்பட்டார்கள். ஆண்ட பரம்பரை மீண்டும் ஆளாகி வருகிறது. அல்ஹம்துலில்லாஹ். முபாறக்

    ReplyDelete
  2. According to the Census and Stat department :
    Buddhist -1,631,999 (70.7)
    Hindu -182,342 (7.9)
    Islam -271,719 (11.8)
    Christian-220,711 (9.6)
    More details : http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/index.php?fileName=pop43&gp=Activities&tpl=3

    ReplyDelete
  3. அட அவ்வளவு தானா? முஸ்லிம்கள் சோம்பேரிகளாகி விட்டார்களா?

    ReplyDelete
  4. Muslims would be better off, if they keep up their production rate in other important areas too, instead of just producing babies.

    ReplyDelete
  5. this only in colombo city (CMC) not in the colombo district.in colombo district buddist may b 60 %

    ReplyDelete

Powered by Blogger.