Header Ads



மலசல கூடக்குழியினுள் விழுந்து 4 வயதுக் குழந்தை வபாத்


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மலசல கூடத்திற்காகத் தோண்டப்பட்ட குழியில் வீழ்ந்த நான்கு வயதுக் குழந்தை மரணமான சம்பவமொன்று ஓட்டமாவடி காவத்தமுனை அறபா  நகரில் இன்று (02.12.2012)ஞாயிறு காலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அரச சார்பற்ற தொண்டர் நிறுவனம் ஒன்றினால் மலசல கூடத்திற்காகத் தோண்டப்பட்டு மூடப்படாமல் மழை நீர் நிரம்பிக் கிடந்த குழிக்குள் குழந்தை விழுந்துள்ளது.  இறந்தவர் அச்சி முஹம்மது முபீதா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். 

வாழைச்சேனை சுற்றுலா நீதிமன்ற பதில் நீதிவான் பி.பிரேம்நாத் அவர்களின் பணிப்பின் பேரில் பொலிஸ் சார்ஜன் யூ.எல்.எம். அஹமது தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஸ்தலத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் அவர்கள் பிரேத பரிசோதனை நடத்தினார். சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


அஹ்மது லெப்பை ஜுனைத்தீன்

அறபா நகர் மீள்குடியேற்ற கிராமத்தில் வசித்தஹச்சி முகம்மது முபீதா (வயது-04) அதிகாலை நீர்  எடுப்பதற்காக தோண்டப்பட்டிருந்த கலிவரைக்குலியில்முற்பட்டபோது தவரிவிழுந்து மரணமாகியுள்ளார். இப்பிரதேசத்தில் மீள்குடியேறி  வாழும் மக்களுக்கான அடிப்படை கட்டுமான வசதிகள் இல்லாத  நிலையில் பல்வேறு  அணர்த்தங்களுக்கு மக்கள்  ஆட்படுகின்றனர். இக்குறித்த  பிரதேசத்தில் நிலவும் குடிதண்ணீர் தட்டுப்பாடு, கிணருகளை  அமைக்க கூடுதலான செலவு என்பவற்றினால் இத்தகைய  சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. குறித்த மரண வீட்டில் கிணறு  இல்லாததினாலாயே தோண்டப்பட்டிருந்த  கலிவரை குழியில் அண்மையில் பெய்த  மழையினால்  நிரம்பி இருந்த நீரப்பெருவதற்கே இக்குழந்தை முயற்சி  செய்துள்ளது.

ஏற்கனவே 09வயது சிறுமியும் கடந்த சில காலங்களுக்கு முன் நீர் எடுக்க தோண்டப்பட்ட குழியில் முயற்சித்த போது தவரிவிழுந்து மூச்சையாகி விசேட சிகிச்சையின் பின்னர் உயிர் தப்பியதும் குறிப்பிடத்தக்கது.




1 comment:

  1. இன்னாளில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்

    ReplyDelete

Powered by Blogger.