இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் 308,171 ரூபா கடனாளி..!
இலங்கையின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள கடன்சுமை, ஒரே ஆண்டில் 25 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு இறுதியில் ஒவ்வொரு இலங்கை குடிமகனுக்கும் சராசரியாக 245,980 ரூபா கடன் சுமை இருந்தது.
இந்த ஆண்டின் இறுதியில், இந்தக் கடன் சுமை 308,171 ரூபாவாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டின், டிசம்பர் மாதம் அரசுக்கு இருந்த மொத்த கடன் தொகையான, 5,133 பில்லியன் ரூபாவை, சென்ற ஆண்டின் நடுப்பகுதி சனத்தொகையால் வகுத்து, கடந்த ஆண்டின் சராசரி கடன்சுமை கணிக்கப்பட்டது.
அதுபோன்று, இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் அரசுக்கு உள்ள மொத்த கடனான 6,248 பில்லியன் ரூபாவை, சராசரி சனத்தொகையான 20.277 மில்லியனால் வகுத்து தற்போதைய சராசரி கடன்சுமை கணிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் இலங்கையின் உள்நாட்டுக்கடன் 16 வீதத்தினாலும், வெளிநாட்டுக்கடன் 28.6 வீதத்தினாலும் அதிகரித்துள்ளது.
Post a Comment