Header Ads



ஹொஸ்னி முபாரக்கின் 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை முடக்கியது சுவிட்சர்லாந்து அரசு


எகிப்து நாட்டின் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக், கடந்த ஆண்டு நடைபெற்ற மக்கள் புரட்சியின் மூலம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். எகிப்து மக்களின் உழைப்பை சுரண்டி, அயல்நாடுகளில் முதலீடு செய்துள்ளதாகவும், புரட்சி நடத்திய போராட்டக்காரர்களை கொன்று குவித்ததாகவும் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முபாரக் மீது வழக்கு நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், அவரது மகன்கள் அலா முபாரக், கமால் முபாரக் ஆகியோரின் பேரில் 'கிரெடிட் சியூசி' வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை  சுவிட்சர்லாந்து அரசு நேற்று முடக்கியுள்ளது.

இந்த தொகை, கடந்த 2005-ம் ஆண்டு ஊழல்வாதிகளின் மூலமாக மேற்கண்ட வங்கியில் போடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, பல எகிப்து அரசியல்வாதிகளின் சுவிஸ் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.