Header Ads



நாட்டில் 2 கிராமங்கள் மண்சரிவு + மழைநீரால் மூடப்பட்டுள்ளதாம்..!


மண்சரிவு மற்றும் மழை நீரால் நாட்டின் வெவ்வேறு இடங்களில் இரண்டு கிராமங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளன.

குருநாகல் வல்பொலகந்த எனும் கிராமம் நேற்று முன்தினம் இடம்பெற்ற மண்சரிவால் முற்றாக மூடப்பட்டுள்ளது. இந்தக் கிராமத்தில் இருந்த 18 வீடுகள் மண்ணுக்குள் முற்றாகப் புதையுண்டுள்ளன. கிராமத்தவர்கள், எந்தவித ஆபத்துகளுமின்றி வெளியேறியுள்ளனர்.

இந்தக் கிராமத்தின் அருகில் இருந்த மலைகள், மண்மேடுகள் மெல்லமெல்ல சரியத் தொடங்கியதும் இக்கிராமவாசிகள் உடுத்த உடையுடன் ஊரைவிட்டு வெளியேறி பௌத்த விகாரையொன்றில் தங்கியுள்ளனர்.

முற்றாக மூடப்பட்ட 18 வீடுகளுள் 50 இலட்சம் ரூபா பெறுமதிவாய்ந்த வீடொன்றும் இருப்பதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கிராமம் இப்போது அடையாளமே தெரியாமல் மண்ணாலும், மலைக்கற்களாலும் முற்றாக மூடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை, சேருநுவர சிறிமங்களகம கிராமமும் நீரில் முற்றாக மூழ்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மகாவலியின் கிளை ஆறு ஒன்றின் காரணமாகவே இக்கிராமம் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அங்கு வெள்ளநீர் சுமார் 12 அடிவரை தேங்கி நிற்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.