கல்கிஸ்ஸை வீடொன்றில் தாயும், 2 பிள்ளைகளும் சடலமாக மீட்பு
கல்கிஸ்ஸை - ஹெல்தேமுல்ல பிரதேச வீடொன்றில் இருந்து தாய் ஒருவர் மற்றும் அவரின் இரண்டு பிள்ளைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இன்று 17-12-2012 காலை கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த சடலங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலங்களில் தீக்காயங்கள் காணப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் தாய்க்கு 31 வயதாகும். ஆண்பிள்ளைகள் 3 வயது மற்றும் ஒரு மாத வயதானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Post a Comment