Header Ads



அம்பாறையில் 28 ஆவது தடவை நிலஅதிர்வு - மாதுருஓய காட்டில் நில அதிர்வு வயலம்



அம்பாறை மாவட்டத்தில் சில பிரதேசங்களில் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் புவியதிர்வுகளுக்கு காரணமான வலயம் மாதுருஓய வனாந்தரத்தில் இருப்பதாக தாம் கணிப்பிட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்க அகழ்வு பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக அம்பாறை மாவட்டத்தின் வடினாகல, தேவாலஹிந்த, தமன போன்ற பிரதேசங்களில் 28 தடவைகள் புவியதிர்வுகள் உணரப்பட்டிருந்தன.

அவற்றில் 10 அதிர்வுகள் அம்பாறை மாவட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நடமாடும் புவியதிர்வு கணிப்பு கருவிகளில் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இதன்போது அதிகூடிய புவியதிர்வு சராசரியாக 2.9 ரிக்டர் அளவுகோளில் பதிவாகியிருந்தது. பகல் வேளையிலேயே அதிகளவான புவியதிர்வுகள் உணரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. sfm

1 comment:

  1. தொழுகைக்கு செல்பவர்களையும்,அல்லாஹ்வின் தீனை நிலைநாட்ட துடிப்பவர்களையும் அடித்து உதைக்கும் நிலையை மாற்றிக்கொண்டு அல்லாஹவிடம் துஆ செய்யுங்கள்.நிச்சயமாக அல்லாஹ்வின் சோதனைகளில் இருந்து மீளலாம்.

    ReplyDelete

Powered by Blogger.