Header Ads



சவூதி அரேபிய இளவரசருக்கு 2770 கோடி ரூபா செலவில் பறக்கும் அரண்மனை


சவுதி அரேபியா இளவரசருக்கு இந்திய ரூபா 2770 கோடி செலவில் அரண்மனை வடிவிலான பறக்கும் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. எண்ணை வளம் கொழிக்கும் சவுதி அரேபியாவின் இளவரசர் அல்வாலீத் பின் தலால். இவர் சவுதி அரேபியாவின் கோடீசுவரர் ஆவார். 

இவர் அதிநவீன ஏ380 சூப்பர் ஜம்போ விமானத்தை விலைக்கு வாங்கியுள்ளார். அதை அரண்மனை போன்று சகல வசதிகளுடன் மிக பிரமாண்டமாக மாற்றியமைத்து வருகிறார். அதற்கான செலவு ரூ.2770 கோடி. இதை பறக்கும் அரண்மனை என்று அழைக்கின்றனர்.

இந்த விமானம் கடந்த 2009-ம் ஆண்டு விலைக்கு வாங்கப்பட்டு அரண்மனை போன்று மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் முடிந்து அடுத்த ஆண்டு (2013) டெலிவரி எடுக்கப்படுகிறது. பறக்கும் அரண்மனை வடிவிலான இந்த விமானத்தில் 4 படுக்கைகள், மிகப் பெரிய அளவிலான படுக்கைகள் கொண்ட 5 அதி நவீன அறைகள், பிரார்த்தனை அறை, கம்ப்யூட்டர் வசதிகளுடன் கூடிய மீட்டிங் ஹால், ரோல்ஸ் ராய்ல் கார் நிறுத்தும் சொகுசு அறை உள்ளிட்டவை உள்ளன.

இந்த தகவலை துபாயில் நடந்த விமானத்துறை மாநாட்டில் இளவரசரின் உதவியாளர் ஹபிப்பெகி தெரிவித்தார்.

4 comments:

  1. அல்லாஹு அக்பர்...... அல்லாஹு அக்பர்...... அல்லாஹு அக்பர்

    ReplyDelete
  2. அதுவரைக்கும் மௌத் வராம இருந்த சரி... என்ன உலகம்மடா இது....

    ReplyDelete
  3. அந்த நாளில் பலருக்கு நீ எப்படி சம்பாதித்தாய் என்ற கேள்விக்கு பதில் சொல்வது கடிணம். இன்னும் சிலருக்கு நீ எப்படி செலவு செய்தாய் என்பதட்கு பதில் சொல்வது கடிணம். இவருக்கு ???

    ReplyDelete
  4. பலஸ்தீன், சோமாலியா, எத்தியோப்பா, மியன்மார், மற்றும் பல நாடுகளில் முஸ்லிம்கள் வறுமையிலும் மிகக் கொடூரமான பட்டினிச் சாவிலும் மடிந்து கொண்டிருக்கையில், இந்த அரபுலக மன்னர்களும் அவர்களது இளவரசர்களும் அடிக்கும் கூத்துகளும் கும்மாளங்களும் எவராலும் பொறுக்க முடியாதவை. இத்தனை கூத்துகளுக்கு மத்தியிலும், இவர்களை இஸ்லாமிய ஆட்சியாளர்கள் என்றும் இவர்களது ஆட்சியை இஸ்லாமிய ஆட்சி என்றும் கூறித் திரியும் நமது சகோதரர்களின் நிலைதான் மிகவும் பரிதாபமானது.

    ReplyDelete

Powered by Blogger.