முஸ்லிம் காங்கிரஸின் 24வது பேராளர் மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை
(எஸ்.அக்தர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 24வது பேராளர் மாநாடு எதிர்வரும் 29.12.2012 சனிக்கிழமை தெகிவளை எஸ்.டி.எஸ்.ஜயசிங்க மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெற இருக்கின்றது.
இந்த போராளர் மாநாட்டில் கட்சியின் புதிய நிர்வாக உத்தியோகத்தர்களை அறிவிக்க இருப்பதுடன், கட்சியீன் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எட்.அஸ்ரப்புக்கு விசேட துஆப் பிராத்தனையும் இடம் பெற இருக்கின்றது.
கட்சியின் தவிசாளர் தலைமையில் நமைபெற இருக்கும் இப்பேராளர் மாநாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கிம் முக்கிய உரையாற்ற இருக்கின்றார். நாட்டின் இன்றை அரசியல் சூழலில் முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக கருத்துக்களை முன்வைப்பார் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 24வது பேராளர் மாநாட்டின் பின்னர் கட்சியில் சில முக்கிய மாற்றங்கள் இடம் பெற இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கட்சியின் தலைமைத்துவத்தை பணயம் வைத்து சாதிக்க நினைக்கும் உயர் பீட உறுப்பினர்களின் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட இருப்பதாக ரவூப் ஹக்கிமின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யார் அந்த தனி நபர்கள்...!!!..? ????
ReplyDeleteமுதலில் தலைவரினதும், தவிசாளரினதும் கடந்தகால அரசியல் சாணக்கியத்தையும், நம்பக தன்மையையும், வெளிப்படை தன்மையையும் சீர்தூக்கிப் பார்ப்பது நல்லது பாருங்கோ..
நல்லது... முடிவு கட்டுங்கோ... அப்பதான் கலகம் பிறக்கும்.. கலகம் பிறந்தால் வழி பிறக்கும்...!
அதாவுல்லா சார்.. உசாராக இரிங்கோ.. அதிருப்தி அடைந்து வருபவர்களை வரவேற்பதற்கு...