Header Ads



23 பேர் மரணம் - 14 பேரை காணவில்லை - சிலாபம் 40 வருடங்களின் பின் நீரிழ் மூழ்கியது



கடந்த தினங்களாக நாடெங்கிலும் பெய்த கடும் மழையினால் பாதிக்கப்ட்ட 12 மாவட்டங்களுள் 5 மாவட்டங்களில் இன்னும் அனர்த்த நிலைமைகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.

புத்தளம், குருணாகலை, கோகாலை, பொலனறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது.

மழையுடனான காலநிலையால் இதுவரையில் 46 ஆயிரத்து 627 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் 20 பேர் வரை மரணித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிததுள்ளது.

இதனிடையே, 6 மாவட்டங்களில் தொடர்ந்தும் மண்சரிவு ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாக  தேசிய கட்டிட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

கண்டி, நுவரெலியா பதுளை, மாத்தளை, குருணாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலேயே இந்த அபாயம் நிலவுவதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

40 வருடங்களின் பின்னர், சிலாபம் நகர் நீரில் மூழ்கியுள்ளது.

இதற்கிடையில், பிரதான 71 நீர்தேக்கங்களில் 31 நீர் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனிடையே, 13 நீர் தேக்கங்களின் அவசர கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.