கிழக்கு ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவு - 220 பேர் மரணம்
ஐரோப்பாவின் கிழக்கு பகுதியில் இந்த மாத தொடக்கத்திலிருந்து கடுமையான பனி வீசி வருகிறது. குறிப்பாக ரஷ்யாவிலிருந்து பிரிந்த நாடுகளில்தான் இதன் பாதிப்பு அதிகம் இருந்து வருகிறது.
இங்குள்ள பால்கன் மற்றும் சைபீரிய பகுதிகளில் தட்பவெப்பநிலை மைனஸ் டிகிரிக்கும் கீழே குறைந்துள்ளது. உக்ரைனில் மட்டும் கடந்த வெள்ளியன்று 83 பேர் உயிர் இழந்தனர்.
போலந்தில் 49 பேர் உள்பட கிழக்கு ஐரோப்பாவின் பெரும் பகுதிகளில் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த மாதம் இதுவரை மொத்தம் 220 பேர் உயிரிழந்துள்ளனர்.
வீடில்லாதவர்களே இந்த கடுமையான பனிப்பொழிவினை தாக்குப்பிடிக்க முடியாமல் அதிகம் இறந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அவர்கள் தவறான முறையில் நெருப்பை மூட்டி குளிர்காய்ந்தபோது, அந்த புகையை சுவாசித்ததால் பலர் இறந்துள்ளனர்.
Post a Comment