Header Ads



220 கிலோ எடையுள்ள மனிதரின் மரண தண்டனை ரத்தாகியது - அமெரிக்காவில் அதிசயம்


அமெரிக்காவை சேர்ந்தவர் ரொனால்டு பேஸ்ட் (53). இவர் ஒரு கொள்ளைக்காரர் ஆவார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஓட்டலில் கொள்ளையடிக்க முயன்றார். அப்போது தடுக்க வந்த ஊழியரை துப்பாக்கியால் சுட்டு கொன்றார். 

இவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி இவருக்கு மரண தண்டனை விதித்தார். அமெரிக்காவில் மரண தண்டனை விஷ ஊசி மூலம் நிறைவேற்றப்படும். ஆனால் ரொனால்டின் தண்டனையை நிறைவேற்ற முடியாமல் அதிகாரிகள் தவித்தனர். அதற்கு இவரது உடல் எடைதான் காரணம். 

இவரது உடல் எடை 220 கிலோ உள்ளது. இதுவே இவரை விஷ ஊசி மூலம் கொன்று மரண தண்டனை நிறைவேற்ற தடையாக இருந்தது. ஏனெனில் குறிப்பிட்ட எடை அளவுக்கு மேல் உள்ள நபர்களை விஷ ஊசி போட்டு கொல்ல முடியாது. இதை காரணமாக வைத்து அவரது வக்கீல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணை நேற்று கோர்ட்டில் நடந்தது. 

இதைத் தொடர்ந்து 16 மணி நேரம் விவாதம் நடந்தது. முடிவில் ரொனால்டு போஸ்டின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது. இருந்தாலும் அவர் விடுதலை செய்யப்படவில்லை. தனது வாழ்நாளின் எஞ்சிய காலத்தை சிறையில் கழிக்க உத்தரவிடப்பட்டது. 

No comments

Powered by Blogger.