Header Ads



2025 ம் ஆண்டு இலங்கையின் பெயர் மாற்றப்படுகிறது..! (படம்)


(ஜே.எம்)
              
கண்டி மாநகர் என்பது முற்றிலும் ஒரு மாறுபட்ட அமைப்பைக் கொண்டது. அதாவது நீண்டகாமாக மூவினங்களும் ஒற்றுமையாகவும் இணக்கமாகவும் வாழ்கின்ற ஒருபகுதி. ஆங்காங்கே சிறு சம்பவங்கள் ஏற்பட்ட போதும் அவை வெளியாரால் மேடை ஏற்றப்பட்டதே தவிர உள்ளுர் மக்கள் வெளிப்படையாக ஈடுபடுவதுமில்லை.

அப்படி பெரும்பான்மை இன கண்டி மக்களிடத்தில் இன ரீதியான குரோத உணர்வுகளை காண்பதற்கும் இல்லை.

கதை என்னவென்றால் அனுராதபுரம், தம்புள்ளை, தெஹிவளை, ராஜகிரிய, குருநாகல், பதுளை... என வந்துள்ள ஒருவகையான உணர்வு கண்டிப் பக்கமும் தலைகாட்ட ஆரம்பித்து விட்டது என்பது தான்.

நேற்று (8.12.2012) கண்டி நகரிலும் சுற்றுப்புறங்களிலும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி எதைக்கட்டியம் கூறுகிறது என்பதை யூகிக்க முடியுமே தவிர உறுதியாக எதையும் கூறமுடியாதுள்ளது.

ஓன்று மட்டும் நிச்சயம் தெரிகிறது பேரினவாதிகளின் அடுத்த இலக்கு கண்டி என்பது. இதற்கு இரண்டு உதாரணங்களைக் கூறமுடியும். ஓன்று இத்துடன் உள்ள சுவரொட்டி.

மற்றது கண்டி மீராமக்கம் பள்ளியில் முற்பக்க சுவரைப் பர்த்தால் தெரியும் அது என்ன என்பது. மீராமக்காம் தர்ஹா மற்றும் பள்ளி போன்றன அமைந்துள்ள இடம் சிங்கள மன்னர் காலத்தில் முஸ்லிம்களுக்கு தானம் வழங்கப்ட்டது. அதுவும் அஸ்கிரிய பீடத்திற்குச் சொந்தமான காணியிலாகும்.

நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இந்த இடத்தில் அஸ்கிரிய பீடமும் மீராமக்கம் பள்ளியும் அயல் வீடுகள் போன்று காணப்படலாம். அதற்காக நாம் எமது பள்ளியை தாரை வார்க்கத் தேவையில்லை. அது அவர்களுக்குச் சொந்தமானது என உரிமை கொண்டாடவும் முடியாது. ஆனால் அதன் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது 'அஸ்கிரிய விகாரைப் பிரதேசம்' என்று.

பழக்கப்பட்ட எம்மவர்களுக்கு அது புரிவதில்லை. ஏனெனில் அஸ்கிரிய பிரதேசத்திற்கு போகும் பாதையை அல்லவா அது குறிக்கிறது என்று நாம் கண்டும் காணததுமாக உள்ளோம் இன்னும் பலவருடங்கள் சென்று பள்ளிச்சுவரிலே அஸ்கிரிய விகாரைப்பிரதேசம் எனப் பொறிக்கப்பட்டுள்ளதே. இது நீண்டகாலமாவே உள்ளதே. எனவே இது எமக்கு சொந்மதானது என ஒருசாரார் உரிமை கொண்டாட வந்தாலும் வருவார்கள்.

இன்று தீகவாப்பி, கதிர்காமம் புனித பிரதேசம், பலாங்கொடையிலுள்ள ஜெய்லானியை அண்மித்த பகுதி  என எவ்வளவோ உதாரணம் கூறலாம். இப்படி உரிமை கொண்டாடும் இடங்கள் எல்லாம் முன்னைய ஆதாரங்களை வைத்தே சொல்லப்படுகிறது. அப்படியாயின் இதுவும் பின் ஒரு காலத்தில் முன் ஆதாரமாகலாமே. ஏதஜர் காலத்தில் கபளீகரம் செய்யப்படலாமே.

அத்துடன் கண்டியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியை உற்று நோக்கினால் சில உண்மைகள் தெளிவாகிறது. இது எவனோ ஒரு கோமாளி செய்தான் எனக் கருத முடியாது. ஏனெனில் இவ்வாறான போஸ்டர்கள் தொடர்ந்து எழுதிப் பழக்கப்பட்ட ஒருவரது கைவண்ணமாக உள்ளது. எனவே அதன் பின்னணியில் ஒரு திட்டமிட்ட குழு செயற்படுகிறது என்பது தெளிவு.

அத்துடன் ஒட்டப்பட்டுள்ள இடங்கள் மறைவான இடங்கள் அல்ல. சன நெரிசல் மற்றும் பாதுகாப்புப் படையினர் போன்றவர்கள் நடமாடும் மிகப் பிரதான சந்தி எப்பொழுதும் பொலீஸார் சேவையில் இருக்கும் இடம். தைரியமாகச் சென்று ஒட்டுவதற்கு சாதாணை ஒருவனால் முடியாது.

மேலும் எமது சிந்தனையில் உதிக்காத யாருமே எதிர்பார்த்திராத ஒரு தனிநாட்டுப் பெயர் குறிப்பிடப்படுகிறது. அது ...ஸ்தான் என முடிவதனால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கசகிஸ்தான், என்ற அடிப்படையில் இதுவும் ஒரு ..ஸ்தான். சபரிஸ்தான் என்றால் என்ன? என்ற விபரம் தெரியாது.

அத்துடன் முஸ்லிம் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம் என்று அதில் கூறப்படவில்லை. வாங்குவோமா? எனக் கேட்பதன் மூலம் மிகப் புத்தி சாதுர்யமாக விசக் கருத்தைப் புகற்றுவதாக உள்ளது. இது முஸ்லிம் வர்த்தகர்கள் மீது ஒரு காழ்புணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

2025ம் ஆண்டு இலங்கை முஸ்லிம் நாடாகும் என்று கூறுவதற்கு எது ஆதாரம் என்று தெரியவில்லை. எனவே கூட்டு மொத்தமாக முஸ்லிமகள் மீது பொறாமை கொண்டு ஒரு குழு இயங்குவதையும் சட்டத்தை கையில் வைத்திருப்போர் கண்டும் காணாததுமாக இருப்பதும் தொட்டிலை ஆட்டும் செயல் என்பதும் தெளிவு. இன்னும் குழந்தையை கிள்ளத் துவங்கவில்லை. இன்று தொட்டிலை ஆட்டும் அதே கைகள் குழந்தையை கிள்ளி விட்ட பின்பும் ஆட்டமுடியும். 

எனவே நாம் என்ன செய்யவேண்டும் என்பதில் தீர்க்கமான முடிவு தேவை. எம்மை தூண்டுகிறார்கள். தூண்டி விட்டு மோதப் பார்க்கிரார்கள் என்பது தெளிவு. எனவே நாம் பொறுமைகாக்க வேண்டும். அதனால்தானோ சபர் – சபரிஸ்தான்(பொறுமை) எனப் பெயர்வைத்துள்ளார்களோ தெரியாது. அல்லது பர்மிய மொழியில் ஏதேனும் கருத்துக்கள் உள்ளதோ தெரியவில்லை.

ஆனால் இத்தவறான எண்ணம் பற்றி எம்மால் இயன்றவரை பெரும்பான்மை நண்பர்களிடம் தெளிவுபடுத்துவது தனிநபர்களின் ஒரு தார்மீகக் கடமையாகும். அதாவது ஆட்சியைக் கைப்பற்றும் எந்த எண்ணமும் எம்மிடம் இல்லை. அதற்கான எந்த முயற்சியும் எம்மிடமில்லை. என்பதை தெளிவு படுத்த வேண்டும். இதை அமைப்பு ரீதியாகச் செய்வதை விட தனிப்பட் ரீதியில் தத்தமது நண்பர்களுக்கு மத்தியில் அல்லது தொழில் செய்யுமிடத்து சகபாடிகளுடன் அல்லது வர்த்தகத் தொடர்புகளின் போது நாம் பிரதி பளிக்கலாம்.

மாறாக வர்த்தக நடிவடிக்கைகளின் போது ஒரு முஹ்மீன் என்பதை மறந்து சொற்ப லாபத்திற்காக  பொய்யையும் ஏமாற்று வித்தைகளையும் அரங்கேற்றுவோமாயின் இது அல்ல இதைவிடப் பாரிய சவால்களை எதிர்கொள்ளவேண்டி ஏற்பட்டாலும் ஆச்சரியம் இல்லை. அல்லாஹ் எம்மைக் காப்பாற்றுவானாக.


4 comments:

  1. ஆம் உண்மை !
    அன்மாயில் கோத்தபய சொல்லிருந்தார் புத்தமதம் மிண்டும் புனர் அமைப்பு !
    இதுக்கு எந்த வகையான பிரச்சினை வந்தாலும் நாம் முகம் கொடுக்க தயார் !
    இவர் இப்படி பலவகையான அறிக்கை விட்டுள்ளார் இதில் .யாருக்கும் கருத்து வேறுபடு இல்லை அது உண்மை .
    ஜனாதிபதி முஸ்லிம் நாட்டுக்கு சொன்று நீதி எடுத்துக்கொண்டு வருவர் !!
    நடப்பது என்ன ......................?
    1.கிறிஸ்மானிதன் .?
    2.முஸ்லிம் வர்த்தகர் பொறுக்கல் இறக்குமதி சிக்கல் .?
    3.இலங்கை தவிருந்த ஏனைய நாட்டுக்கு கிரிக்கட் ஆதரவு கொடுக்க கூடாது .?
    3.அனுரத புறத்தில் பகுத்த தீவிரவாதி பள்ளி உடைப்பு தொடக்கம் ~கண்டி வரைக்கும் ?
    4.ஷ ரியா சட்டம் விமர்சனம் ...நடலமன்றம் !
    5.மாடு அறுக்கக் கூடாது ..?
    6.முஸ்லிம் கடை களில் பொறுக்கல் வேண்ட கூடாது பிரச்சரம் பிக்கு ..?
    ##. இது யார் செய்வது இன்னும் புரிய வில்லை ...

    ReplyDelete
  2. அன்பர்களே இலங்கையில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் இப்படியான ஆரம்ப முன்னெடுப்புகள் மிக துல்லியமாக திட்டமிட்டு ஒவ்வொரு இடத்திலும் ஆரம்பமாகி வருகின்றது இப்படியான துவேஷ மற்றும் எதிர்ப்பு சம்பந்தமான செய்திகள் கூடுதலாக இன்டர்நெட் வாயிலாக தான் வாசிக்க முடிகின்றது.
    இதில் என்ன வியத்தகு விடயம் என்னவெனில் இலங்கையில் நடக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான முன்னெடுப்புகள் வெளிநாடுகளில் வாழும் மற்றும் தொழில் புரியும் எம்மை போன்றவர்கள் அறிந்து தெரிந்து வைத்துள்ள அளவேனும் இலங்கையில் வாழும் எம் சகோதரர்கள் அறிந்து உள்ளார்களா என்பது சந்தேகமாக உள்ளது. காரணம் நான் எனது பிரதேசத்தில் வாழும் சிலருடன் இது சம்பந்தமாக பேசிய பொது அப்படி ஒன்று இலங்கையில் நடக்கின்றதா என்று வியப்பு கலந்த ஆச்சர்யத்துடன் என்னுடன் விடயங்களை கேட்டு அறிந்து கொண்டனர். இப்படி எதுவும் அறியாமல் எம் சமுதாயம் தான் உண்டு தன் குடும்பம் தனது தொழில் என்று வாழும் சமுதாயமாக எம்மவர்கள் இலங்கையில் வாழ்கின்றனர்.
    இலங்கையில் நடக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான முன்னெடுப்புகள் பற்றி நாட்டில் உள்ள அத்தனை பள்ளிவாயில்களிலும் பயான்கள் மூலமாகவும் அறிவுறுத்தல்கள் மூலமாகவும் துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் மற்றும் எப்படி எல்லாம் செய்திகளை எமது சகோதரர்களுக்கு அறிவுறுத்த முடியுமோ அப்படியெல்லாம் அறிவுறுத்த வேண்டும். அப்படி எதுவும் எம்மக்கள் அறியாத நிலையில் இதற்கு முடிவு காண்பது மிக கடினம்.
    முதலில் எம்மத்தியில் இருக்கும் பிரிவினை விட்டு விட்டு ஒன்றுபடவேண்டும். .......

    அல்லாஹ் எம்மை காப்பாற்றுவானாக என்று சொல்லும் அதேநேரம் எம்மவர்களின் உழைப்பும் பங்கேற்பும் இதற்கு முக்கியம் அப்போதுதான் அல்லாஹ்வின் உதவியும் அருளும் எங்களுக்கு கிடைக்கும்.

    இஷாக் எ ரஹீம்
    கேகுனகோல்ல

    ReplyDelete
  3. Muslikalukke teriyatha nalla nalla idea ellam solranga enga than poi mudiya pohutho teriyathu???

    ReplyDelete
  4. இப்படியே பார்த்துக் கொண்டு போனால் கடைசியில் முஸ்லிம்களுக்கு எஞ்சுவது சபரிஸ்தான் அல்ல.... கப்ரிஸ்தான் மட்டுமே...வாழ்க பொது பலசேனா நம்ம பயல்கள் தூங்கட்டும்......

    ReplyDelete

Powered by Blogger.