ரஷ்யாவில் 20 ஆண்டுகளில் 341 பத்திரிகையாளர்கள் காணாமல் போயுள்ளனர்
ரஷ்யாவில் தொடர்ந்து 20 ஆண்டுகளில் 341 பத்திரிகையாளர்கள் காணாமல் போயுள்ளதாக மிர் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் காணாமல் போயினரா அல்லது கொல்லப்பட்டனரா என்பது குறித்து தெரியவில்லை.
ரஷ்யாவின் தேகஸ்தான் பகுதியில் மட்டும் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 16 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளில் அல்ஜீரியா, ஈராக் நாடுகளுக்கு அடுத்த படியாக ரஷ்யா உள்ளது. மேலும் 2012-ல் உலகம் முழுவதும் சுமார் 67 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment