சிரியாவில் அகதி முகாம் மீது தாக்குதல் - 15 பேர் மரணம்
சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமில் 16-12-2012 விமானம் தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதில் குறைந்தது 15 பேர் இறந்துள்ளனர். சிரியாவில் பணியாற்றி வரும் மனித உரிமை அமைப்பினர் இந்த தாக்குதலினால் சாவு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.
அல்யார்முக் என்ற இந்த முகாமில் சுமார் 5 லட்சம் பாலஸ்தின அகதிகள் மற்றும் சிரியா அகதிகள் தங்கியுள்ளனர். இவர்களில் இரு பிரிவாக பிரிந்து அதிபர் மற்றும் புரட்சிப்படைக்கும் ஆதரவு அளித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இப்பகுதியை சுற்றி அதிபர் மற்றும் புரட்சிப் படைக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. சண்டைக்கு பயந்து மசூதியில் தங்கியிருந்தவர்கள் மீது விமானம் தாக்குதல் நடத்தியுள்ளது புரட்சிப்படையினர் தெரிவித்துள்ளனர். அங்கு நடக்கும் வன்முறைக்கு பயந்து மக்கள் அதிக அளவில் இடம் பெயர்ந்து வருவது கவலை அளிக்கிறது என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.
Post a Comment