சிரியா ராணுவ போர் விமானங்கள் குண்டு வீச்சில் 142 பேர் உயிரிழப்பு
சிரியா அதிபர் பஷார் அல் ஆஸôத்துக்கு எதிராக அந்த நாட்டில் கடந்த பல மாதங்களாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபருக்கு எதிராக பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு புரட்சிப் படையினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து ராணுவத்துக்கும் புரட்சிப் படையினருக்கும் கடும் சண்டை நிலவி வருகிறது. துருக்கி எல்லையோரத்தில் புரட்சிப் படையினர் கட்டுப்பாட்டில் உள்ள பல நகரங்களை மீட்க ராணுவம் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில் வியாழக்கிழமை சிரியா ராணுவம் வான் வழித் தாக்குதலில் ஈடுபட்டது. போர் விமானங்கள் நடத்திய இந்த குண்டு வீச்சில் 142 பேர் உயிரிழந்தனர். அலெப்போ, டெய்ர் எசார், யால்டா உள்பட நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
Post a Comment