Header Ads



ஷிராணிக்கு எதிரான 14 குற்றச்சாட்டுக்கள் சபாநாயகரிடம் - விவாதிக்க 10 நாட்கள்

பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான 14 குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கப்பட்ட குற்றப்பிரேரணையை விசாரணை செய்வதெற்கென நியமிக்கப்பட்ட பாராளுமன்றத்தெரிவுக்குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று 08-12-2012 சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத் தெரிவுக்குழுத் தலைவர் அநுர பிரியதர்ஷன யாப்பா குறித்த அறிக்கையை சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார்.

குறித்த குழுவிலிருந்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் நேற்று விலகிக்கொண்டதையடுத்து நேற்று இரவு முழுவதும் தெரிவிக்குழுவின் நடவடிக்கைகள் இடம்பெற்ற நிலையிலேயே பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பான அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் மீதான குற்றப்பிரேரணை விசாரணை அறிக்கை தொடர்பான விவாதம் 10 நாட்களுக்கு இடம்பெறும் என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பாராளுமன்றில் அறிவித்துள்ளார். 

குறித்த விவாதமானது ஒரு மாத காலத்திற்கு பின் அதாவது அடுத்தவருடம் ஜனவரி மாதம் பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான ஜோன் அமரதுங்க குறித்த அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்தவேண்டும் எனக் வேண்டுகோள் விடுத்ததையடுத்தே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான 14 குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கப்பட்ட குற்றப்பிரேரணையை விசாரணை செய்வதெற்கென நியமிக்கப்பட்ட பாராளுமன்றத்தெரிவுக்குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.