13 வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் நாட்டின் எதிர்கால பயணத்திற்கும் பாரிய தடை
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் நாட்டின் எதிர்கால பயணத்திற்கும் பாரிய தடையாக அமையும் என ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட மாகாண சபை முறைமையானது இலங்கைக்கு பொருத்தமானதா இல்லை,
அதன் மூலம் நாடாளுமன்றத்தின் உச்ச அதிகாரம் குறைத்து மதிப்பிடப்படும் விதம் குறித்தும் உயர்நீதமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள், புலம்பெயர் தமிழர்கள், தமிழகத்தின் தேவையை நிறைவேற்றுவதற்காகவே, 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை வலுப்படுத்துமாறு கோரி அரசாங்கத்தில் உள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனுக்களில் கையெழுத்திடுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன் 13வது அரசியல் அமைப்புத் திருத்தம் மூலம் கொண்டு வரப்பட்ட மாகாண சபை முறையானது இந்தியாவினால், இலங்கை மீது பலவந்தமாக திணிக்கப்பட்ட ஜனநாயக விரோதமான ஒன்று.
இதனை வலுப்படுத்துமாறு கூறி, மனுக்களை கையெழுத்திடம் நாடாளுமன்ற உறுப்பினர்களை அதை மறந்து போயுள்ளனர்.
இவ்வாறு பலவந்தமான திணிக்கப்பட்ட 13வது அரசியல் அமைப்புத் திருத்தம் மூலம் கொண்டு வரப்பட்ட மாகாண சபை முறைமையை வலுப்படுத்துவதா, திருத்துவதா, இரத்துச் செய்வதா என்பது குறித்து விரிவான கலந்துரையாடலுக்கு உட்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment