நடுக்கடலில் தத்தளித்த 128 மியன்மார் முஸ்லிம்கள் மீட்பு
மியான்மர் (பர்மா) நாட்டிலிருந்து கடந்த மாதம் 25-ம் தேதி 4 பெண்கள் மற்றும் 9 குழந்தகளுடன் 128 பேர் மலேசியா நாட்டிற்கு படகு ஒன்றில் பயணமானார்கள். அந்தமான் தீவுக்கடல் வழியாக மலேசியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற அவர்களின் படகில் அப்போது கோளாறு ஏற்பட்டது. இதனால் மீண்டும் பயணத்தை தொடரமுடியாமல் நடுக்கடலில் அவர்கள் ஒரு வாரகாலமாக கடலில் தத்தளித்திருக்கின்றனர்.
கடல் அலையினால் அந்தமான் நிகோபார் தீவுகளில் ஒன்றான நார்கொண்டம் தீவு நோக்கி அந்த படகு அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களைப் பற்றிய செய்தி இந்திய கடற்படையினருக்கு தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்ற கடற்படையினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 128 மியான்மர் நாட்டினரை காப்பாற்றினர். பின்னர் அத்தீவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு விசாரித்து வருகின்றனர்.
மியன்மாரில் பௌத்த பயங்கரவாதிகளுக்கு அஞ்சி மலேசியாவுக்கு தப்பிச்செல்ல முயன்ற ஒருதொகுதி முஸ்லிம்களே இவ்வாறு நடுக்கடலில் மீட்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Post a Comment