Header Ads



ரீ.பி ஜாயாவின் 123வது நினைவு தினம்


(அஸ்ரப் ஏ சமத்)

கலாநிதி  ரீ.பி ஜாயாவின் 123வது நினைவு தினம் 2013 ஐனவரி 01ம் திகதி பி.பகல் 4 மணிக்கு கொழும்பு  டி.ஆர்.விஜயவர்த்தன மாவத்தையில் உள்ள முஸ்லீம் பெண்கள் கல்வி வட்டச் சங்க மண்டபத்தில் நடைபெறும்.

டி.பீ. ஜாயா பற்றிய பிரதான உரையை பிரதம அதிதியாகாக் கலந்து கொள்ளும்  நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம் உரையாற்றுவார்.

இந் நிகழ்வு ஜாயா மன்றத் தலைவர் அஸ்ரப் ஹூசைன் தலைமையில் நடைபெறும்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர், ஆளுனர் அலவி மௌலானா அமைச்சர் ஏ.எச.எம் பௌசி ஆகியோரும் கலந்து சிறப்பிக்கின்றனர். 

ஜாயா  பற்றிய இதழ் ஒன்றும் வெளியிடப்படும். இதனை புரவலர் ஹாசீம் உமர் பெற்றுக்கொள்வார்.   குர் ஆண் மனணப்போட்டியில் முதல் இடம் பெற்ற மாணவன் ரிஸ்கான் கௌரவிக்கப்படுவார்.  ரீ.பி ஜாயா பாடசாலைக்கு உபகரணங்கள் வழங்கப்படும்.  இவ் வைபவத்தில் ரீ.பி ஜாயாவின் கொழும்பு சாகிராக் கல்லூரியில் அதிபராக பதவி வகித்த காலத்தில் அவரது 6 மாணவர்கள் கௌரவிக்கப்படுவார்கள். மேலும் சமுக சேவையாளர்கள் இலக்கியவாதிகளும் இவ் வைபவத்தில் கௌரவிக்கப்பட உள்ளதாக ரி.பி ஜாயா மண்றத்தின் செயலாளர் பைசால் பழில் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.