Header Ads



பாகிஸ்தான் விமான நிலையம் மீது தாக்குதல் - 12 பேர் பலத்த காயம்



பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள பச்சா கான் சர்வதேச விமான நிலையத்தில் 15-12-2012 தாக்குதல் நடத்தினர். 5 ராக்கெட்டுகளை வீசி நடத்திய இந்த தாக்குதலில் குறைந்தபட்சம் 12 பேர் பலத்த காயம் அடைந்தனர். இரண்டு ராக்கெட்டுகள் விமான நிலைய ஓடுதளத்தில் விழுந்து வெடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்தார். ஒரு ராக்கெட் விமான நிலையம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்துள்ளது. இதில் ஜன்னல்கள் நொறுங்கின.

தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து பெஷாவர் விமான நிலையம் மூடப்பட்டது. விமான நிலையத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

எந்த திசையில் இருந்து ராக்கெட்டுகள் வீசப்பட்டன என்பது தெரியாததால் விமான நிலைய ஊழியர்கள் பீதியடைந்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ராணுவம் வரவழைக்கப்பட்டது. 

No comments

Powered by Blogger.