கிழக்கு மாகாண சபையின் முதலாவது வரவு செலவுத்திட்ட விவாதம் டிசம்பர் 11 முதல் 14 வரை
(எம்.எம்.ஏ.ஸமட்)
கிழக்கு மாகாண சபையின் 2013 ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட விவாதம் டிசம்பர்11 தொடக்கம் 14 வரை நடைபெறவுள்ளது. இவ்வாறு கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவை பேச்சாளரும, வீதி அபிருத்தி அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
மாகாண சபை அமைச்சர் இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,
இரண்டாவது தடவையாக நடைபெற்ற கிழக்கு மாகாணசபையின் முதலாவது வரவு செலவுத் திட்ட விவாதம் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் டபிள்யூ.ஜி.எம்.ஆரியவதி கலப்பதி தலைமையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 11ம் திகதி ஆரம்பிக்கப்படும் 11ம் திகதி முதல் யிலிருந்து 14 ம் திகதி வரை நடைபெற உள்ள கிழக்கு மாகாண சபைக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது மாகாணசபை முதலாமைச்சரின் அமைச்சுக்குரிய நிதி ஒதுக்கீடு உட்பட நான்கு அமைச்சுக்குமான நிதி ஒதுக்கீட்டுக்கான விவாதங்கள் இடம்பெறுமென அவர் குறிப்பிட்டார்.
இதனடிப்படையில் பதினோராம் திகதி, கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சரின் வரவு செலவு திட்ட வாசிப்பைத் தொடர்ந்து, ஆளுநர் செயலகம், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, மாகாண பேரவைச் செயலகம் போன்றவற்றிற்கான குழுநிலை விவாதமும் வாக்கெடுப்பும் இடம்பெறும்.
12ம் திகதி புதன் கிழமை விவசாய, கல்வி அமைச்சிகளுக்குரிய குழுநிலை விவாதமும் வாக்கெடுப்பும்; இடம்பெறவுள்ளதுடன் 13 ம் திகதி சுகாதார அமைச்சிற்குரிய குழு நிலை விவாதமும் வாக்கெடுப்பும்; இடம்பெறவுள்ளது. இறுதியாக .14ம் திகதி வெள்ளிக்கிழமை வீதி அபிவிருத்தி அமைச்சிற்குரிய குழு நிலை விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறும்; என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment