சமையலுக்கு விறகு சேகரிக்க சென்ற 10 மாணவிகள் கண்ணிவெடியில் சிக்கி வபாத்
ஆப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்கச் பகுதியில் 10 வயதிற்குட்பட்ட 10 மாணவிகள், 17-0-12-2012 பள்ளி செல்வதற்கு முன்னதாக, தங்கள் வீட்டின் சமையலுக்கு விறகு சேகரிப்பதற்காக காட்டுப்பகுதிக்குச் சென்றனர்.
அங்கு புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் சிக்கி அவர்கள் 10 பேரும் உடல் சிதறி உருக்குலைந்துப் பலியானார்கள். இந்த தகவலை சப்பர்கார் மாவட்ட கவர்னர் தெரிவித்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக போர் மேகங்களால் சூழப்பட்ட ஆப்கானிஸ்தானில், கால் வைத்த இடத்தில் எல்லாம் கண்ணி வெடிக்கு பல பேர் பலியாகி வருகின்றனர். இதுவரை 7 லட்சம் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டும், கண்ணி வெடிக்கு பலியாகின்றனர். இவர்களில் 30 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர சாலையோர குண்டு வெடிப்பு சம்பவங்களில் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 1,145 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
Post a Comment