Header Ads



சவூதி அரேபிய இலங்கை தூதரகத்தில் வாராந்தம் 10 பேர் தஞ்சம்


(ஜே.எம்.ஹபீஸ்)

சவூதி அரேபியாவில் பல்வேறு காரணங்களாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடாக வழங்க 56 மில்லியன் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளதாக சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரக நிர்வாக பதில் அதிகாரி சரத்குமார வீரசிங்க தெரித்துள்ளார்.

விபத்து, தாக்குதல், போன்ற பல்வேறு காரணங்களால் பாதிக்ப்பட்டவர்கள்,அங்கவீனமானவர்கள் மரணித்தவர்கள குடும்பங்கள் போன்ற வற்றிற்கு இந்நட்டஈடு வழங்கப்பவுள்ளதாகவும அவர் தெரிவித்துள்ளார்.

தாம் பதவி ஏற்கும் போது 600 ற்கும் மேற்பட்ட இவ்வாறான பிரச்சினைகள் இருந்தபோதும் அவை தற்போது 24 ஆகக் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சவூதி  அரேபியாவில் உள்ள 10 சிறைக் கூடங்களில் இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைத்  தூதுவராலயத்தில் வாரம் குறைந்தது பத்துப் பேராவது தஞ்சம் அடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்ததுள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட பிரியா விடை வைபவம் ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.





No comments

Powered by Blogger.