Header Ads



வரவுசெலவுத் திட்டம் மேலதிக 101 வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றம்



ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் 2013ம் நிதி ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மேலதிக 101 வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வரவு - செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக 158 வாக்குகளும் எதிராக 57 வாக்குகளும் பெறப்பட்டன. 

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியோடு இணைந்துள்ள அனைத்து கட்சிகளும் வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. 

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக தேசிய கூட்டமைப்பு என்பன வரவு - செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தன

No comments

Powered by Blogger.