Header Ads



காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் 1000 நாட்கள் பூர்த்தி நிறைவு விழா



(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு -காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் ஆயிரம் நாட்கள் பூர்த்தி நிறைவு விழா மற்றும் பெற்றோரை இழந்த மற்றும்  வறிய மாணவர்களுக்கான புத்தகப்பை வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை பிற்பகல் புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெப்பை தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் கௌரவ அதிதிகளான சட்டத்தரணி எம்.முஸாபிக் 'சட்டத்தரணி உவைஸ் 'மட்டக்களப்பு மத்தி கல்வி வலய இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் கபூர் மதனி'மட்டக்களப்பு-காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி அலியார் பலாஹி'ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் மௌலவி கவிமனி எம்.எச்.எம்.புகாரி பலாஹி 'சிரேஸ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான்  மற்றும் அதிதிகளினால் வறிய மாணவர்களுக்கு இலவச புத்தகப் பைகள் வழங்கிவைக்கப்பட்டன.

இங்கு மாணவர்களின் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.

சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெப்பை தலைமையில் இயங்கும் இவ்அமைப்பு சமூகத்தில் நலிவுற்றவர்கள் 'பெற்றோரை இழந்தவர்கள் 'வறிய மாணவர்கள் போன்றோரை இனங்கண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








No comments

Powered by Blogger.