பலஸ்தீனத்திற்கு 100 மில்லியன் டொலர்களை வழங்க அரபு லீக் முன்வருகை
(Tn)
பலஸ்தீன நிர்வாகத்திற்கு பல நூறு மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் இணங்கியுள்ளனர். பலஸ்தீனு க்கான வரி வருமானத்தை இஸ்ரேல் முடக்கியதை அடுத்தே அரபு லீக் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பலஸ்தீனம் கடந்த மாதம் அங்கத்துவமல்லா கண்காணிப்பாளர் நாடாக ஐ. நா. பொதுச்சபையில் அங்கீகாரம் பெற்றதைத் தொடர்ந்து இஸ்ரேல் பலஸ்தீனத்தின் நிதியை முடக்கியது.
பலஸ்தீனத்திற்கு இந்த மாதத்திற்கு சேர வேண்டிய வரி மற்றும் சுங்க கட்டண வருமானம் சுமார் 100 மில்லியன் டொலர்களை வழங்கப்போவதில்லை என இஸ்ரேல் நிதி அமைச்சு அறிவித்தது. இந்தத் தொகை மூலம் பலஸ்தீன், இஸ்ரேல் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய கடன் செலுத்தப்படவுள்ளதாகவும் அது கூறியது.
இந்நிலையில் பலஸ்தீன நிர்வாகத்திற்கு பற்றாக்குறையாக உள்ள தொகையை வழங்க கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டார் தலைநகர் டோஹாவில் வைத்து அரபு லீக் உடன்பட்டதாக பலஸ்தீன நிர்வாகத்தைச் சேர்ந்த சயித் ஏரகத் குறிப்பிட்டுள்ளார். அரபு லீக் பலஸ்தீனத்திற்கு மாதாந்தம் 100 மில்லியன் டொலர்களை வழங்க இணங்கியது என அவர் தெரிவித்தார்.
இந்த நிதியுதவி தொடர்பில் கட்டார் பிரதமர் மற்றும் அரபு லீக் செயலாளர் நாயகம் ஆகியோர் இன்னும் இரு தினங்களுக்குள் இந்தத் திட்டத்தை அமுலுக்கு கொண்டுவரும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகிறார்.
Alhamdulillah
ReplyDelete