உலகில் செல்வாக்குள்ளவர் முதல் 10 இடங்களில் சவூதி மன்னரும் இடம்பிடிப்பு
உலகளவில் செல்வாக்கு உள்ளவர்களின் பெயர் பட்டியலை, பிரபல போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 12வது இடத்திலும், பிரதமர் மன்மோகன் சிங் 19வது இடத்திலும் இருக்கிறார். அமெரிக்காவில் இருந்து வெளிவரும் Ôபோர்ப்ஸ்Õ பத்திரிகை உலகின் செல்வாக்கு உள்ள பிரமுகர்களின் பெயர் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் உலகளவில் செல்வாக்குள்ளவர்களாக 71 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா முதல் இடம் பிடித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 4வது இடத்தில் உள்ளார். போப் பெனடிக்ட் 5வது இடத்தில் இருக்கிறார். ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், ரஷ்ய அதிபர் புடின், சவுதி மன்னர் அப்துல்லா பின் அப்துல்லாசிஸ் அல் சவுத், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஆகியோர் முதல் 10 இடங்களுக்குள் உள்ளனர். இந்தியாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 12வது இடத்தையும், பிரதமர் மன்மோகன் சிங் 19வது இடத்தையும் பிடித்துள்ளனர். இதுகுறித்து போர்ப்ஸ் எக்சியூட்டிவ் எடிட்டர் மைக்கேல் நோயர் கூறுகையில், Ôஆட்சி மாற்றம் காரணமாக கடந்த ஆண்டு செல்வாக்கு உள்ளவர்களின் பட்டியலில் சீன அதிபர் ஹூ ஜின்டாவோ 3வது இடத்தில் இருந்தார்.
தற்போது அடுத்த அதிபராக ஜி ஜின்பிங் தேர்ந்தெடுக்கபட்டுள்ளதால், ஜின்டாவோ 9வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்Õ என்றார். இதேபோல் கடந்த ஆண்டு போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் இந்த ஆண்டு பட்டியலில் இடம்பெறவில்லை. அவர் அமைச்சராக தொடர விருப்பம் இல்லை என்று அறிவித்துள்ளதால் இந்த நிலைமை. மேலும், 28 வயதாகும் பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க், 81 வயதாகும் மீடியா அதிபர் ரூபர்ட் முர்டோச் ஆகியோர் முறையே 25, 26வது இடங்களை பிடித்துள்ளனர்.
Post a Comment