'சுப்ரீம் செட் - 1' செய்மதி இலங்கைக்கு சொந்தமானதல்ல - அரசாங்கம் ஒப்புதல்
விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள "சுப்ரீம் செட்1'' என்னும் ஊடகச் செய்மதிக்கும் இலங்கை அரசுக்கும் எந்த உரித்துடைமையும் கிடையாது. அரசின் சார்பில் ஒரு சதமேனும் முதலீடு செய்யப்படவில்லை.
சீன நிறுவனங்களின் பங்கீட்டுடன் தனியார் நிறுவனம் ஒன்றே இந்தச் செய்மதிக்கு உரித்துடையதாகும் என தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில் சட்டத்துறைகள் அமைச்சர் ரஞ்சித்சியம் பலாபிட்டிய நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 6 ஆம் திகதி நாடாளுமன்றில் கேள்வி ஒன்றை எழுப்பினார். இலங்கையின் முதலாவது ஊடக செய்மதியான "சுப்ரீம் செட் 1'' வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரின் கனவு நனவாகிவிட்டது என்று தம்பட்டம் அடிக்கப்பட்டது. இந்தச் செய்மதி "சுப்ரீம் செட் 1'' என்று நீங்கள் கூறுகின்றீர்கள். ஆனால் அது ""சைனா செட் 12'' என்று சர்வதேசம் கூறுகின்றது.
அப்படியானால் இந்த ""சுப்ரீம் செட்'' யாருக்குச் சொந்தம்? இதற்கு இலங்கை அரசு செய்துள்ள முதலீடு எவ்வளவு? அதனை எவ்வாறு மீளப் பெறப் போகின்றீர்கள்? அதன் எதிர்காலச் செயற்றிட்டம் என்ன? இந்த நிறுவனத்தின் பணிப்பாளர்கள் யார்? என ரணில் விக்கிரமசிங்க அந்தக் கேள்வியில் குறிப்பிட்டிருந்தார். கேள்விக்கு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்றுப் பதிலளித்தார்.
* ""சுப்ரீம் செட் 1'' தனியார் நிறுவனம். 2007 /7 கம்பனிகள் சட்டத்தின் கீழ் சட்டரீதியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
* இந்த நிறுவனத்தின் பணிப்பாளர்களாக இராமசாமி முத்துச்சாமி மணிவண்ணன், சண்முகதாசன் சுதர்ஷன் ஆகிய இருவர் செயற்படுகின்றனர்.
* ""சுப்ரீம் செட் 1'' தனியார் நிறுவனம் சீனாவிலுள்ள கிரேட் வோல் நிறுவனம். சீனா சற்றலைற் நிறுவனம் என்பவற்றுடன் ஒப்பந்தங்களைச் செய்துள்ளனர்.
* அதேவேளை சுப்ரீம் செட் தனியார் நிறுவனம்.
முதலீட்டுச் சபையுடன் கட்டம் கட்டமாக மூன்று தவணையில் (2012, 2013, 2018) முதலீடுகளைச் செலுத்தவுள்ளன கூட்டு ஒப்பந்தம் ஒன்றையும் செய்துள்ளது.
இந்தச் செய்மதி திட்டத்தில் இலங்கை அரசு எந்தவிதமான பங்களிப்பையும் முதலீட்டையும் செய்யவில்லை.
எனவே அதன் செலவீனங்களை மீளப்பெற வேண்டிய கடப்பாடும் இல்லை. ஆக மொத்தத்தில் இந்தச் செய்மதி இலங்கைக்குச் சொந்தமானதும் அல்ல என அமைச்சர் நாடளுமன்றத்தில் தெரிவித்தார்.
Post a Comment