சிரியாவில் தொடருகிறது அழிவு - ஆஸாத்தின் ஷிஆ படைகள் கொத்து குண்டு வீச்சு (வீடியோ)
சிரிய அரசின் யுத்த விமானம் விளையாட்டு அரங்கொன்றில் கொத்துக் குண்டை போட்டதில் 10 சிறுவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர். கிழக்கு டமஸ்கஸின் டயிர் அல் அஸ்பிரிலுள்ள விளையாட்டு மைதானத்தின் மீது மிக் யுத்த விமானம் போட்ட குண்டிலேயே சிறுவர்கள் பலியானதாக எதிர்ப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
டமாஸ்கஸ் - சிரியாவில் அதிபர் அஸத்தைப் பதவியிலிருந்து நீக்குவதற்காக போராட்டத்தின் முக்கிய கட்டமாக போராட்டக்காரர்கள் ராணுவ உலங்கு ஊர்தித் தளத்தினை கைப்பற்றியுள்ளனர்.
சிரியாவில் அதிபர் அஸத்தின் ராணுவத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் கடும் சண்டை நீடித்து வருகிறது. இந்த மோதலில் ஏறத்தாழ நாற்பதினாயிரம் பேர் பலியாகி உள்ளனர். போராட்டம் வலுவடைந்து தற்போது போராட்டக்காரர்கள் தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி முன்னேறி வருகின்றனர். சிறிது தினங்களுக்கு முன்பு ராணுவ முகாம் ஒன்றினையும் அவர்கள் கைப்பற்றினர்.
டமாஸ்கஸில் இருந்து ஏறத்தாழ 15 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மரஜல் சுல்தான் என்ற இடத்தில் உள்ள ராணுவ உலங்கு ஊர்தித் தளத்தினை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இரண்டு உலங்கு ஊர்திகள் சேதம் அடைந்துள்ளதாகவும், 15 ராணுவ வீரர்களை போராட்டக் காரர்கள் சிறைப்பிடித்துள்ளதாகவும் தெரிகிறது.
Post a Comment