பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு கொஞ்சம் புத்தி சொல்லுங்கள்..!
மருத்துவர்கள் அறிவுறுத்தியும், பிலிப்பைன்ஸ் அதிபர் அகினோ, புகைக்கும் பழக்கத்தை கை விடவில்லை.பிலிப்பைன்ஸ் அதிபர், பெனிக்னோ அகினோ, 52. இவருக்கு, இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால், ஒரு காதலி இருக்கிறார். தொடர்ந்து புகைக்கும் பழக்கத்தால், அகினோ அடிக்கடி இருமுகிறார். சர்வதேச நிதி தலைவரை சமீபத்தில் சந்திக்க இருந்தார். உடல் நிலை சரியில்லாததால், இந்த சந்திப்பை ரத்து செய்தார்.இவரது உடல் நலத்தில், அக்கறை கொண்ட மருத்துவர்கள், புகைக்கும் பழக்கத்தை கைவிட்டு, மற்றவர்களுக்கு, முன்னுதாரணமாக இருக்கும் படி, அகினோவுக்கு அறிவுறுத்தி இருந்தனர்.இதுகுறித்து, அகினோவின் உதவியாளர் எட்வின் கூறியதாவது:ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு, கடந்த மாதம் சென்ற போது தான், அகினோவுக்கு இருமல் அதிகமாகியது. இது அவரது, புகைக்கும் பழக்கத்தால் ஏற்படவில்லை. பூக்களின் மகரந்த துகள்கள் காற்றில் பரவியதால், ஏற்பட்ட அலர்ஜியால் தான், அவருக்கு இருமல் ஏற்பட்டது.அகினோ, தன்னுடைய மன அழுத்தத்தை போக்கி கொள்ள, புகைக்கிறார். எது நல்லது என்பது, அவருக்கு தெரியும். எனவே, நாம் அவரை வற்புறுத்த தேவையில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
Post a Comment