அமெரிக்காவை தாக்கிய புயலும், நபிகளாருக்கு எதிரான அவமதிப்பு திரைப்படமும்..!
(மொஹமட் மம்சாத்)
காலநிலை சீர்கேட்டின் விளைவாக முழு உலகமும் பெரியதோர் இழப்பை அனுபவித்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே . உலகில் பல நாடுகள் இந்த சிக்கலை எதிர் கொண்டு வந்தாலும் குறிப்பாக சில நாடுகள் மக்களின் பொது அவதானத்துக்கு உட்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும் .
அதிலும் குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவை காவு கொண்டுள்ள அனர்த்தம் வழமையை விட புதியோர் விதமாக அனுகப்படுகின்றமை அவதனத்துக்குள்ளான ஒரு அம்சமாகும்.
தெளிவாக சொல்வதானால் அமெரிக்காவை காவு கொண்டுள்ள இந்த அனர்த்தம் அல்லாஹ் அவனது கோபத்தின் வெளிப்பாடே என்ற நிலைப்பாடு இன்று பரவலாக முஸ்லிம்களுக்கு மத்தியில் காணப்படுகின்றது. இதற்கான நேரடி காரணமாக அடையாளப்படுத்தப்படும் அம்சம் அண்மையில் வெளியான இன்னோசென்சே ஒப் முஸ்லீம்ஸ் என்ற திரைப்படமாகும்.
இத்தகையதோர் நிலைப்பாட்டுக்கு முஸ்லிம் சமூகத்தின் ஒரு சாரார் வருவதற்கான காரணம், அவர்கள் நபிகளாரின் தூதை சரியாக புரியாமை என்று கூட கூறலாம் . நபி மீதான அன்பின் வெளிப்பாடாகவே குறித்த சாரார் மேற்சொன்ன நிலைப்பாட்டுக்கு வருகின்றனர். என்றாலும் இஸ்லாம் இவ்வரானதோர் நிலைப்பாட்டினை என்றும் வரவேற்பதில்லை.
இஸ்லாத்தை தெளிவாக எதிர்த்து அதன் எதிரிகள் போராடும் போதே பெண்களையும், குழந்தைகளையும், காக்கும் அழகிய தர்மத்தை இஸ்லாம் எங்களுக்கு சொல்லி தந்திருக்கும் போது, இன்று அம்மக்கள் இயற்கையின் சீற்றத்திற்கு உட்பட்டிருக்கும் போது, அவர்கள் படும் கஷ்டத்தை கண்டு முஸ்லிம்களாகிய நாம் பெருமூச்சு விடுவோமாக இருந்தால்.. ''நாம் உங்களை அகிலத்தாருக்கு ஒரு அருளாகவே அனுப்பினோம்'' என்ற செய்திக்கு முற்றிலும் முரணான ஒரு நிலைப்பாட்டையே நாம் எடுத்திருக்கிறோம் என எண்ண தோன்றுகிறது ....
குறித்த அந்த திரைப்படத்துக்கு ஆதரவாக ஒரு சில விசமிகள் செயற்பட்டார்கள் என்பதற்காக ஒரு சமூகத்தையே முற்றிலும் புறக்கணிப்பது அல்லது அவர்கள் படும் துன்பத்தை கண்டு மகிழ்வுறுவது என்பது இஸ்லாத்தை பற்றிய இன்னும் தப்பான எண்ணங்களை வலுவுற செய்யுமே தவிர எந்த விதத்திலும் நன்மைபயக்கும் ஒரு அம்சமாக திகழ மாட்டாது என்பது கண்கூடு. எனவே முஸ்லிம்களாகிய நாம் இவ்வாறான சந்தர்பங்களில் இஸ்லாத்தை பற்றிய நல்லதோர் செய்தியை பரப்ப முயற்சிக்க வேண்டுமே தவிர இஸ்லாத்தின் மீதான பற்று என்ற பெயரில் மனிதாபிமானத்தை மறந்து செயட்படலாகாது ...!!
தீமை செய்தவருக்கு மன்னித்து நன்மை செய்வதே மனிதப்பண்பு இதனை போதித்து நடைமுறையில் காட்டிஆயிரத்துனாநூருக்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டது ,நாம் மனிதனாக இருப்பதற்கு முயற்சிப்போம் ,
ReplyDeleteமனிதாபிமானத்துடன் பார்கபடவேண்டியது கடமைதான் ஆனால் நாம் விரும்புவோர் இஸ்லாத்தை ஏட்க வேண்டும் என்பதட்காக அடுதோர் இஸ்லாம் குறித்து நல்லதாக எண்ண வழிகாட்டல்களை விட்டு வைக்க வேண்டும் என்பதட்காக உண்மைகளை மறைக்களாமோ இயட்கையின் சீற்றமா??? அப்படி ஒரு வார்தையை ஈமான் கொண்டோர்களால் சொல்லமுடியுமா??? அல்லாஹ்வின் ஏட்பாடை வானில் இருந்து முடிவு செய்யபட்டு பூமியில் இறங்கியதை சத்தியமான உண்மைகளை மறைபதால் உலக மக்களுக்கு ஹிதாயத் கிடைக்க வழி பிறக்குமா??? உங்கள் கதை குறைஷிதலைவர்களுக்கு ஹிதாயத் கிடைக்க வேண்டும் என்ற அவாவில் தன்னிடம் சத்தியதை தேடிவந்த குருட்டு மனிதரை விட்டும் விரண்டோட எண்ணிய அல்லாஹ்வின் தூதரின் நிலமையை ஒத்தது
ReplyDeleteமனிதரிலேயே மாணிக்கமான அல்லாஹ்வின் தூதர் அட்ப நேரம் அதுவும் பெரிய மனிதர்கள் சத்திய வழியை ஏற்றுகொள்ள வேண்டுமே என்பதட்காக தன்னிடம் சத்தையை நாடிவந்த குறுட்டு மனிதர் இந்நேரம் வராமல் இந்த தலைவர்கள் இல்லாத நேரத்தில் சற்று தாமதிது வந்திருக்கலாமே என்று மனம் நொடிபொழுது கோணியதட்கே அல்லாஹ்வின் வசனம் உலக முடிவுவரை அத்தாட்சியாக அதனை கன்டித்துகொண்டிருக்க நாம் சத்தையதை எவறுக்காகவும் பூசி மெழுகி அவர்களுக்கு உவப்பான மாதிரி வசனம் பேசலாமா??? அதனால் அப்படி பேசுவதால் ஹிதாயத் திறக்கபடும் என்று எங்கேயாட்சி சொல்லபட்டுள்ளதா இஸ்லாம் என்பது அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதட்கே முதலிடம் கொடுக்கிறது ஏனெனில் அச்சத்தினாலே அன்றி வேரெதாலும் மனித உள்ளங்கள் சிந்திக்கும் ஆற்றலை பெறுவதில்லை தன் நிலை குறித்து???