மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்குமாறு பரிந்துரை - ஐரோப்பிய நாடுகள் ஆதரவு
பாகிஸ்தானில் தலிபான்களால் சுடப்பட்ட சிறுமி மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைக்க வேண்டும் என்று ஆயிரக்கணக்கான இங்கிலாந்து மக்கள் பரிந்துரை செய்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள அழகிய ரம்மியமான ஸ்வாட் பள்ளத்தாக்கை சேர்ந்த சிறுமி மலாலா யூசுப்ஸாய். தனது 11 வயது முதலே தலிபான்களின் கொடுமைகளை எதிர்த்து கட்டுரைகள் எழுதி வந்தாள். பெண்கள் பள்ளிக்கு செல்ல கூடாது என்ற தலிபான்களின் தடையை எதிர்த்து பேசினாள். பிபிசியில் பரபரப்பாக பேட்டி அளித்தார்.
இதனால் கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி பள்ளிக்கு செல்லும் மலாலா மீது தலிபான்கள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்நிலையில் இங்கிலாந்தின் பர்மிங்காம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாள் மலாலா. இப்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தீவிரவாத எதிர்ப்பு, பெண் குழந்தை கல்விக்காக போராடி வரும் சிறுமிக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்கிலாந்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இங்கிலாந்தில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த பெண் ஷாகிதா சவுத்ரி தலைமையில் ஏராளமானோர், மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரைக்க வேண்டும் என்று பிரதமர் டேவிட் கேமரூனை வலியுறுத்தி பிரசாரம் செய்து வருகின்றனர். மலாலா தனக்காக மட்டும் வாதாடவில்லை. பெண் என்பதால் கல்வி மறுக்கப்படுபவர்கள் அனைவருக்காகவும் போராடி வருகிறாள் என்று ஷாகிதா இணைய தளத்தில் கூறியுள்ளார். இதுதொடர்பாக 30 ஆயிரம் பேர் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றும் இங்கிலாந்து பிரதமரிடம் அளிக்கப்பட உள்ளது. இதற்கிடையில் மலாலா வுக்கு நோபல் பரிசு வழங்க கனடா, பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளிலும் ஆதரவு பெருகி வருகிறது.
Siru pilaiyei suddathatkakave kanditthom ippothu ethirikal onru servathai paarkka yosikka vendi ullathu....
ReplyDeleteஇன்னொறு தஸ்லிமா நஸ்ரினை உருவாக்கி பாகிஸ்தானின் அவமான சின்னமாக வளர்தெடுக்க மிக இலாவகமாக குல்ல நரி கூட்டம் திட்டமிடுவதன் முதல் படி இது???
ReplyDelete