குச்சவெளி கிராம தமிழ், முஸ்லிம்களின் ஏக்கம் (படங்கள் இணைப்பு)
திருகோணமலையின் வடக்கே 30 மைல் கல்லுக்கப்பால் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம் குச்சவெளிக் கிராமம் பெரும்பாண்மை முஸ்லிம்களும் தமிழர்களும் இணைந்து வாழும் கிராமம். உல்லாசப் பயணிகளை வெகுவாகக் கவரும் கடலும், கடலைச் சூழவுள்ள குளங்கள், ஆறுகள், மலைகள் வயல் நிலங்கள்; கலப்பு ஆற்றுப்படுக்கைகள் ..இங்கு எல்லாக் காலங்களிலும் தொழில் செய்து சீவியம் நடாத்தக் கூடிய ஏற்ற பூமி இங்கு உண்டு.
வந்தாரை வாழ வைக்கும் வளம் கொழிக்கும் பூமி கடந்த 30 வருடங்களாக ஏற்பட்ட பாரிய யுத்த அழிவு அதன் பின்னரான சுனாமி அழிவு இத்தனைக்கும் எதிர் முகம் கொடுத்து வாழ்ந்து வருபவர்கள் இப்பிரதேச மக்கள்.அவ்வப் போது இடம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தாம் பிறந்து வளர்ந்த பிரதேசத்தையும் வளங்களையும் விட்டுக் கொடுக்காமல் பாதுகாப்பதிலும் உறுதியாக இருந்தவர்கள் இவ்வாறு பூர்வீகமாக வாழ்ந்து வரும் தமிழ் முஸ்லிம்களின் நிலங்கள் குடியிருப்பு மனைகள் எல்லாவற்றையும் இளந்து விடுவோமா என்கின்ற அச்ச நிலை தோன்றியுள்ளது.
யுத்தத்தின் பின்னரான காலப் பகுதி; ஆக்கிரமிப்பும், நில அபகரிப்பும் சர்வ சாதாரனமாக நடை பெற்று வருகிறது. தொல்பொருள் ஆராய்ச்சி என்கின்ற பெயரில் ஆன்டாண்டு காலமாக பராமரிக்கப்பட்டு வந்த குடியிருப்பு நிலங்கள் சுவீகரிக்கப்பட்டு விடுமோ என்கின்ற நிலை தோன்றியுள்ளது. புதிய வரலாறுகள் தோற்றுவிக்கப்படுகின்றன. இனங்களிடையே முரன்பாடுகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் திரை மறைவில் மேற் கொள்ளப்படுகின்றன. புதிய புதிய விகாரைகள் உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.. பெரும்பாண்மை முஸ்லிம்கள்.தமிழர்களும் வாழும் பிரதேசங்களை தங்களின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப சில செயற்பாடுகள் நடை பெற்று வருகின்றன.
தற்போதுள்ள குச்சவெளி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பழைமை வாயந்த அரசாங்க ஓய்வு வீடு இருந்தது. இங்கு யுத்த காலத்தில் பாதுகாப்பின் நிமித்தம் கடற்படையினர் நிலை கொன்டிருந்தனர்.
இப்படை முகாமுக்குப் பின்னால் பிரதேச மக்களினால் பெயர் சூட்டப்பட்ட கடலோடு அன்டிய கரடி மலை அமையப் பெற்றுள்ளது. இங்கு விகாரைகளோ பௌத்த சிலைகளையோ தாம் கண்டதில்லையென மஹ்முத் காதர்என்பவர் தெரிவிக்கிறார்.மலையடிவாரத்தில் கல்வெட்டு ஒன்று இருந்ததை நான் அறிவேன் அந்த சூழலில்
வாழ்ந்தவர்கள் மீன் பிடித்தமிழர்கள் முஸ்லிம்களும அங்கு ஒரு பிள்ளையார் கோயில் இருந்ததையும் நான் அறிவேன் அயலிலுள்ளவர்கள் உறுதி ஆவணங்களும் வைத்திருக்கிறார்கள் இவ்வாரான நிலையில் மலை உச்சியில் விகாரைக்கான அடித்தளம் அமைக்கப் பட்டிருப்பது அதிர்ச்சி தரக் கூடியது.
தொல் பொருளுக்குரிய தடயங்கள் இங்கு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொல் பொருள் பெயர்ப்பலகை போடப்பட்டு ஒரு சில மாதங்கள் கழிந்த நிலையில் மூன்று நாளைக்கு முன்னர் விகாரைக்கான பெயர்ப்லகையும் போடப்பட்டது.வெள்ளிக்கிழமை 10.00மணியலவில் சமய ஆராதரணயுடன் பல நிகழ்ச்சிகள் நடை பெற்றது. வெளி பிரதேசங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட சிலரும் பௌத்த குருமார்கள் மற்றும் படை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் பிங்கம சமய நிகழ்வும் நடை பெற்றது.
Post a Comment