Header Ads



குருநாகல் - தெலும்புகொல்ல பள்ளிவாசல் முரண்பாடு தொடருகிறது (படங்கள்)


(இக்பால் அலி)

ரிதிகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தெலும்பு கொல்ல புதிய பள்ளிவாசல் கடந்த வெள்ளிக் கிழமை 12.45 பி.ப தாக்குதலை தொடர்ந்து நேற்றிருவு அப்பள்ளிவாசல் மீது ஒரு தென்னை மரத்த வெட்டி வீழ்த்தி அதன் கூரையினை சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த முறைப்பாட்டைத் தெரிவிப்பதற்காக கொக்கெரெல்ல பொலிஸ் நிலையப் சென்ற இருவரை பொலிஸார் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர். அத்துடன் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவரும் இன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை பாதிப்புக்குள்ளான புதிய பள்ளிவாசலைச் சேர்ந்த குடும்பப் பெண்கள்  ரிதிகம பிரதேச செயலகத்திற்குச் சென்று தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது தொடர்பாக முறைப்பாடு தெரிவிக்கச் சென்றனர். அதனைத் தொடர்ந்து  அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்து 40 தாய்மார்களுடன் 20 ஆண்களுமாக  குருநாகல் சென்று  பிரதிப் பொலிஸ் மாஅதிபருடன்  சந்திப்பை மேற் கொண்டுள்ளனர்.  

தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தொடர்ந்து பள்ளிவாசலுக்கு தாக்குதல் நடத்தப்பட்டு வருதாகவும் எனத் தெரிவித்து பொலிஸ் பிரதிப் பொலிஸ் அதிபருடன் முறைப்பாடு தெரிவித்தாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து குருநாகல் பொலிஸ் நிலையத்திலிருந்து விசேட பொலிஸ்  அணியினர் அங்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக விசாரணை மேற் கொள்ள நாளை பிரதிப் பொலிஸ் அலுவலகத்திற்கு இரு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.




2 comments:

  1. அட எஹூதிக்கு பிறந்தவனுகள் போன்று இருக்குறீர்களே சிங்களவன் உடைப்பது போதாதென்று நீங்களுமா ?

    ReplyDelete
  2. Shinhalese are More better than these people.(Those Who Broken).

    ReplyDelete

Powered by Blogger.