Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகளே..! பதுளை முஸ்லிம்களுக்கு உடன் தீர்வைப் பெற்றுக்கொடுங்கள்


(எம்.எம்.ஏ.ஸமட்)

பதுளை முஸ்லிம்கள் எதிர்நோக்கும்  நெருக்கடிகளுக்கு உடன் தீர்;வைப் பெற்றுக்கொடுக்க முஸ்லிம் அரசியல் தலைவர் முன்வர வேண்டுமென கிழக்கிலங்கை முஸ்லிம் இளைஞர் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

பதுளை முஸ்லிங்கள் சம காலத்தில் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் கிழக்கிலங்கை முஸ்லிம் இளைஞர் முன்னணி ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

அண்மைக்காலமாக பதுளை வாழ் சிறுபான்மையினர் ஒரு சில பேரினவாதிகளின் நெருக்குவாரங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னதாக முஸ்லிம்களை கேவலப்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக முஸ்லிம்கள்ன் வர்த்தக நிலயங்களில் பெரும்பான்மை இனத்தவர் கொள்வனவு செய்யக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தட்டமிடடு பெரும்பான்மையின மக்களை பதுளையில் வாழும் முஸ்லிம்கள் மீது ஏவி விட்டு அவர்களின் உடமைகள் மற்றும் உயிர்களுக்கு சேதமிழைவித்து இனக் கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சியாக் கூட இத்தகைய நெருக்குவார நடவடிக்கைகள் அமையலாம். இன்று பதுளையில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் சிறு சிறு நெருக்குவார நடவடிக்கைகள் நாளை முஸ்லிம்கள் வாழும் ஏனை பிரதேசங்களிலும் நடைபெற வாய்ப்புள்ளது.

காஸா முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் முஸ்லிம்  அமைப்புக்களும் அரசியல் தலைவர்களும் பதுளை முஸ்லிம்கள் எதிர் நோக்கும் நெருக்கடிகளுக்கும் குரல் கொடுப்பதோடு சமகாலத்தில்   பதுளை மக்கள் எதிர் நோக்கும் இத்தகைய நெருக்குவாரங்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி அவர்களின் பொருளாதாரத்தையும் இருப்பையும் பாதுகாக்க முன்வர வேண்டுமென முஸ்லிம் இளைஞர் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.


No comments

Powered by Blogger.