எகிப்தில் கொப்டிக் கிறிஸ்தவர்களின் போப்பாண்டவரை தெரிவுசெய்த சிறுவன்
எகிப்து கொப்டிக் கிறிஸ்தவர்களின் புதிய போப்பாண்டவராக பிஷோப் டவட்ரோஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் மத்திய கிழக்கின் மிகப்பெரிய கிறிஸ்தவ சிறுபான்மையினரின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கெய்ரோவின் சென்மார்க்ஸ் தேவாலயத்தில் நேற்று நடந்த பைவத்தில் கண்ணாடிக் குவளைக்குள் பரித்துரைக்கப்பட்ட பெயர்கள் எழுதிய துண்டுகளில் இருந்து கண்கள் கட்டப்பட்ட சிறுவன் மூலமே கொப்டிக் கிறிஸ்தவர்களின் புதிய போப்பாண்டவர் தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கு மூவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. 60 வயதான டவட்ரோஸ் மூன்றாவது ஷனவ்டா போப்பாண்டவருக்கு பதில் நியமிக்க ப்பட்டார். ஷனவ்டா போப்பாண்டவர் கடந்த மார்ச் மாதம் தனது 88 ஆவது வயதில் மரணமடைந்தார். tn
Post a Comment