ஹலால் சான்றிதழ் தேவையில்லை - போர்க்கொடி தூக்குகிறது சிங்கள பொதுபல சேனா
(Vi)
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் வழங்கப்படும் ஹலால் சான்றிதழுக்கு எதிரான பிரசாரம் ஒன்றினை பொதுபல சேனா அமைப்பு முன்னெடுத்து வருகிறது.
இது தொடர்பில் நேற்று கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர், ஹலால் சான்றிதழ் சிங்கள மக்கள் மீது திணிக்கப்படுவதாகவும் ஹலால் குறியீட்டுடன்கூடிய பொருட்களை புறக்கணிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் சுமார் நான்காயிரம் ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்கள் உள்ளன. இந்த சான்றிதழுக்கு வருடாந்தம் 2 இலட்சம் ரூபா செலுத்தப்படுகிறது. இந்தச் சான்றிதழ் எமக்குத் தேவையில்லை. ஹலால் சான்றிதழ் பொறிக்கப்படாத பொருட்களையே கொள்வனவு செய்யுமாறு சிங்கள மக்களிடம் வேண்டுகோள்விடுகிகிறோம் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
ஹலால் சான்றிதழ் மூலம் பெறப்படும் பணம் இஸ்லாமிய பிரசாரப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதற்கு சிங்கள மக்கள் பங்காளர்களாக இருக்கக் கூடாது எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
தேரர் அவர்கள் எமது முஸ்லிம் சமூதாயத்துக்கு செய்த இத்தொண்டிட்காக நாம் அனைவரும் அவர்மீது நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில் இதுவரை காலமும் இந்த ஹலால் சான்றிதளைப்பற்றி பெரிதாக அக்கறை காட்டத முஸ்லிம்களும் இனிமேல் இதற்கு ஒரு முக்கியத்துவத்தினை வழங்குவர்.
ReplyDeleteமேலும் முஸ்லிம் அல்லாதவர்களின் மனதிலும் இவ் ஹலால் என்றால் என்ன? எனும் கேள்வி எழும் வண்ணம் சந்தர்ப்பமொன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். ஆகவே நாம் அனைவரும் அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் இக்கேள்விக்கான ஒரு சிறப்பான பதிலை தேடிப்பெற்றுக்கொள்வது இன்றியமையாததாகும்.
This Halal certification only for Muslims . Mr Athooojane Sera thera... oya kochara kivvoth anvareng minisshu meakkai kanne.. i mean all people .u don't eat . ea logo eka vikkunalathama appitta theshana karanad umanavak ne.....
ReplyDeleteanyhow if u can ..try to stop it ..in shaaa allah it'll be never stop
பன்றி இறைச்சியையும்,நெய்த்தோலியும் சாப்பிட்டா இப்படித்தான் மூளைக்கும் வாய்க்கும் சம்மந்தமில்லாமல் பேசுவார்கள்...இந்த கொடுமையை யாரிடம் போய் சொல்வது? இந்த முட்டாள்களை யார் ஹலால் உணவினை சாப்பிட சொன்னது? இந்த ஆத்துபேயனுகளுக்கு புரிய வைக்க புத்தர் வந்தாலும் முடியாது...
ReplyDeleteஹலால் சான்றிதழ் இல்லாத உணவு என்றல் பன்றி, பாம்பு, நாய், புனை, தவளை, ஓணான் கல் போன்றவற்றையா சிங்கள மக்களை தேரை சாப்பிடச்சொல்லுகிறார்?
ReplyDelete@ mubharrakk thaha
ReplyDeleteயார் சொன்னா பன்றி இறைச்சியும், நெத்தலியும் எண்டு? இப்படிப் பேசுற தேரர் மார் தான் மாட்டிறைச்சி, கோழி, மீன் எண்டு எல்லாத்தையும் டிசைன், டிசைனா "வெட்டுவாங்க". இவங்கள நம்புற சிங்கள (பௌத்த) மக்கள் தான் பாவம்.