தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமா பட்டம் பெற்றவர்களுக்கான ஆசிரிய நியமனம்
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமா பட்டம் பெற்றவர்களுக்கான ஆசிரிய நியமனம் வழங்கும் நிகழ்வு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது டிப்ளோமாதாரர்கள் 39 பேருக்கான நியமனக் கடிதங்களை வடமாகாண ஆளுநர் வழங்கினார். இவ்வாறு நியமனக் கடிதம் வழங்கப்பட்டவர்கள் ஆசிரிய பற்றாக்குறை நிலவும் தீலவகம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய், மடு மற்றும் வவுனியா வடக்கு ஆகிய கல்வி வலய பாடசாலைகளில் கடமையாற்;றுவார்கள்.
இவ்வாறு ஆசிரியர்களுக்கான விடுதி, போக்குவரத்து வசதிகள் உரிய முறையில் ஏற்படுத்திக் கொடுக்கப்படுமெனவும் ஆளுநர் தெரிவித்தார். வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஷ், ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன், பிரதி செயலாளர் ப.விக்னேஸ்வரன் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment